ஜெயேந்திரர்: அரசை கண்டித்து இன்று விஎச்பி மாநாடு
சென்னை:
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரின் கைதைக் கண்டித்து வி.எச்.பி. சார்பில் இன்று இந்து சமுதாய பாதுகாப்பு மாநாடு சென்னையில்நடைபெறுகிறது.
சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் இந்த மாநாட்டில் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கல், முன்னாள் மத்திய அமைச்சர்முரளி மனோகர் ஜோஷி, அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன், வி.எச்.பி. மூத்த தலைவர் கிரிராஜ் கிஷோர், உடுப்பி பெஜாவர்மடாதிபதி விஸ்வேச தீர்த்தர், மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் சகோதரர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக தமிழகம் வந்திருக்கும் முரளி மனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர் ஆகியோர் கலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரைச்சந்தித்தனர். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் மடத்தில் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷி,
ஜெயேந்திரர் மெளன விரதத்தில் இருப்பதால் அவருடன் பேச முடியவில்லை. இருப்பினும் பூஜையில் கலந்து கொண்டோம்.
சங்கராச்சாரியார்கள் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து தொடர்ந்து மக்களிடம் தெரிவிப்போம். தமிழக அரசு இந்துமதத்தின் மீதும், காஞ்சி மடத்தின் மீதும் தொடுத்து வரும் தாக்குதல்கள் குறித்தும் மக்களிடம் தெரிவிப்போம்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது நீதிக்காக போராடுவோம்.
இந்த மாநாட்டிற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து அனுமதி கோரி வி.எச்.பியினர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியதும், பின்பு 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications