சுனாமி: அழுகிய உடல்களை அகற்றிய துப்புறவு ஊழியர்களுக்கு ஜெ. பரிசு
சென்னை:
சுனாமி பாதித்த பகுதிகளில் அழுகிய உடல்களை கைகளால் அகற்றிய 4,791 துப்புறவுப் பணியாளர்களுக்கும் தலா ரூ. 2,500வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் ஈடுபட வந்த ராணுவத்தினர் இந்த உடல்களை அகற்ற மறுத்துவிட்டதால், தமிழகம் முழுவதும் இருந்தும்மாநகராட்சி, நகராட்சித் துப்புறவுப் பணியாளர்கள் 4,791 பேர் நாகை, குமரி, கடலூர் மாவட்டங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அவர்களும் பொது மக்களும் சமூக நலத் தொண்டர்களும் தான் உடல்களை அகற்றினர். புல்டோசர்கள் கொண்டு பிணங்களைப்புதைக்க மண் தோண்டுவது, குடிநீரை சுத்திகரிப்பு செய்து தருவது போன்ற பணிகளையே ராணுவத்தினர் செய்தனர்.
இந் நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,
இந்த 4,792 துப்புறவுத் தொழிலாளிகளுக்கும் தலா ரூ. 2,500 வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதனால் அரசுக்கு ரூ. 1.2 கோடிசெலவாகும். ஆனால், அவர்கள் செய்த மிகப் பெரிய மனிதாபிமானப் பணிக்கு இது ஈடாகாது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடனுதவி தருவதாக மத்திய அரசு சொல்கிறது. கடனுதவி எல்லாம் போதாது.அவர்களுக்கு நிதியை முழுவதும் மானியமாகவே தர வேண்டும்.
படகுகள் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடன் வழங்குவதாகக் கூறுவது போதுமானதல்ல. முழு நிதியையும் மானியமாகத்தருமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இந்த நிதியை மீனவர்களுக்கு வங்கிகள் மூலமாக மத்திய அரசு தருவது தவறு.இதை மாநில அரசு மூலமாகவே வழங்க வேண்டும்.
மற்ற நாடுகள் எல்லாம் சுனாமி தாக்குதலில் இருந்து மீளவே பல நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில் முதல் கட்ட மீட்புநடவடிக்கைகளை மிக வேகமாக நடத்தி சாதனை படைத்தது தமிழக அரசு என்றார் ஜெயலலிதா.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications