For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொல்லாத தம்பி காளிமுத்து: கருணாநிதி கிண்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராஜிவ் கொலையாளிகளிக்கும் ஜெயலலிதாவுக்கும் தொடர்பிருப்பதாக நான் சட்டசபையில் பேசியதாக முதல்வர் கூறியிருப்பதுஅப்பட்டமான பொய் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து முரசொலியில் கருணாநிதி எழுதியிருப்பதாவது:

ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கும் எனக்கும் தொடர்பிருப்பதாகவும், கொலையாளிகளுடன் நான் படம் எடுத்துக்கொண்டதாகவும், என்னை நாடு கடத்த வேண்டும் என்றும் சட்டசபையில் கருணாநிதி பேசினார் என்றும் முதல்வர் ஜெயலலிதாநேற்று சட்டசபையில் பேசியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் இந்தப் பேச்சு அப்பட்டமான பொய். 1997ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி சில பத்திரிக்கைகளில் வந்த படம் குறித்துசட்டசபையில் பிரச்சனை எழுப்பப்பட்டது.

(ராஜிவ் கொலையாளிகளான சிவராஜன், நளினி ஆகியோரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒசூரைச் சேர்ந்த இருஅதிமுகவினருடன் ஜெயலலிதா இருக்கும் படம் அது. அவர்களை சிவராஜன், நளினி என நினைத்து பத்திரிக்கைகள் தவறாகபடம் வெளியிட்டன).

அப்போது இந்தப் புகைப்படங்கள் குறித்து மாநில அரசு விசாரித்து மத்திய அரசிடம் தெரிவிக்கும் என்று தான் நான்சட்டசபையில் பேசினேன். மற்றபடி ராஜிவ் கொலையில் ஜெயலலிதாவை சம்பந்தப்படுத்தியோ, கொலையாளிகளுடன்ஜெயலலிதா படம் எடுத்துக் கொண்டதாகவோ நான் பேசவில்லை.

அப்போது ஜெயலலிதாவுடன் படத்தில் இருந்தவர்கள் ராஜிவ் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என்றும் அவையில்தெளிவாக்கப்பட்டது.

உண்மை இப்படியிருக்க ஜெயலலிதா வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போது என்னைப் பற்றி ஒரு முழுப் பொய்யைபேரவையில் கூறி, என்னை இழிவுபடுத்த முனைந்தது கடும் கண்டனத்துக்குரியது.

நான் பேசாத ஒன்றை ஜெயலலிதா பேசியதாகச் சொல்லியிருக்கிறார். அதற்கு ஆமாம் போட்டிருக்கிறார் அவைத் தலைவர்காளிமுத்து. இப்படி பொய்யான தகவல் சொன்ன ஜெயலலிதா மீது உரிமைப் பிரச்சனை கூட கொண்டு வரலாம்.

அதே போல என்னை நள்ளிரவில் கைது செய்தபோது அய்யோ, கொல்றாங்களே என்று அலறியதாக, அதிலிருந்தேகருணாநிதியின் தைரியம் வெளிப்பட்டுவிட்டது என்றும் ஜெயலலிதாவின் கைத்தடியான ஒருவர் (அமைச்சர் ஜெயக்குமார்)பேசியிருக்கிறார். அதை ஜெயலலிதாவும் வழிமொழிந்திருக்கிறார்.

பாவம், ஜெயலலிதாவின் உத்தரவுப்படி அந்த அமைச்சர் அப்படி நடந்திருக்கிறார். அவருக்காக பரிதாபப்படுகிறேன். நான்நள்ளிரவில் கொடூரமான முறையில் கைதானபோது அய்யோ கொல்றாங்களே என்று அலறியது என் பேரன் தயாநிதி. ஒருவேளைஅந்த குரூரமான தாக்குதலை தாங்க முடியாமல் நானே அலறியிருந்தாலும் அது ஒன்றும் கேலிக்குரியதல்ல.

ஏனெனின் நான் தாக்கப்பட்டு ரத்தம் கட்டிய காயம் பல நாள் இருந்ததை பத்திரிக்கையாளர்களும் பார்த்திருக்கிறார்கள். வலிதாங்காமல் கத்தியதால் நான் தைரியமில்லாதவன் என்று ஒரு அமைச்சரும், அவரது எஜமானி ஜெயலலிதாவும் அவைத் தலைவர்காளிமுத்துவின் ஒப்புதலும் பேசியிருக்கிறார்கள்.

நான் தைரியமில்லாதவன் தான்- அம்மையாரைப் போன்ற வைர நெஞ்சம் எனக்கு இல்லை தான்.

அம்மையாரின் அபார துணிச்சலும் அஞ்சாத நெஞ்சமும் வைராக்கியமும் ஈடு இணை இல்லாதது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதை அவைத் தலைவர் காளிமுத்துவும் மறுக்க மாட்டார் என்பதற்கு அவர் வாய்மொழி சாட்சியங்களேஏராளமாகவும், வரிசையாகவும் இருக்கின்றன ஒலி நாடாக்களில்.

அரசாங்க சொத்தை என் பெயரிலே வாங்கிக் கொண்டு, பிறகு அது என் கையெழுத்தில்லை என மறுப்பதற்கும், அதன்பேரில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கன்டனத்துக்கு ஆளாவதற்கும் தேவையான தைரியமும் எனக்கு இல்லை என்பது உண்மை தான்.

சங்கரராமன் கொலை வழக்கு குற்றப்பத்திரிக்கையை கோவில் வைத்து பூஜை செய்தது தவறில்லை என்று ஜெயலலிதாபேசியிருக்கிறார். மதசார்பற்ற சர்க்கார் என்று கூறிக் கொண்டு இந்தக் காரியத்தை ஜெயலலிதா அங்கீகரித்துப் பேசியிருப்பதுதிராவிடத் தன்மான இயக்கத்துக்கும் தனக்கும் எவ்வளவு தூர இடைவெளி என்பதை ஜெயலலிதா எடுத்துக் காட்டிவிட்டார்.

இது அய்யாவையும் அண்ணாவையும் களங்கப்படுத்தும் செயல்.

சுனாமியால் இறந்தவர்களின் உடல்களை அகற்ற ராணுவத்தினர் மறுத்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். அது குறித்துபாதுகாப்பு அமைச்சர் விசாரிக்க வேண்டும். அந்தப் பணியில் ஈடுபட மறுத்த ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தைப் பார்த்து காலி டப்பா என்று ஜெயலலிதா பேசிய வார்த்தையை சபாநாயகர்காளிமுத்து அனுமதித்திருக்கிறார். அம்மாவின் அரசியல் அநாகரீகத்தை அகில இந்தியாவும் புரிந்து கொள்ளட்டும் என்பதற்காகஅந்த அசிங்கமான பொருட் தரும் வார்த்தையை அவைத் தலைவர் அனுமதிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

என்ன இருந்தாலும் காளிமுத்து பொல்லாத தம்பி ஆயிற்றே.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X