"என் பெயர் இராமதாசு"
சென்னை:
கடந்த ஒரு வருடமாக என் பெயரை இராமதாஸ் என்பதற்கு பதிலாக இராமதாசு என்று தான் எழுதி வருகிறேன் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். அதை மிரட்டலாகசொல்லவில்லை. திரைப்படங்களுக்கு நாங்கள் யாருமே எதிரி இல்லை. அப்படி சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள். முதல்வர்சொல்வது போல நாங்கள் யாரையும் மிரட்டவில்லை.
கடந்த ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்களில் 64 படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டியுள்ளனர். தமிழை அழிக்கநினைப்பவர்கள், வெறுப்பவர்கள், தமிழ் விரோதிகள்தான் இவ்வாறு திட்டமிட்டு ஆங்கிலப் பெயர்களை வைக்கிறார்கள்.
சிலர் எங்களது கோரிக்கையை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஓரிருவர்தான் விதண்டாவாதம் செய்துவருகிறார்கள்.
நாங்கள் வியாபாரிகள், இளைஞர்கள் விரும்புகிறார்கள், நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள். ப்ளூ பிலிம் பார்ப்பதைக்கூடத்தான் இளைஞர்கள் விரும்புகிறார்கள். அதைத் தடை செய்யாமல் விட வேண்டியதுதானே? ஏன் தடுக்கிறார்கள்?
திரைப் படங்களில் ஆபாசம், வன்முறை இருக்கக் கூடாது என்று கோருகிறோம். ஆனால் சிலரோ, நாங்கள் யதார்த்தத்தைத்தான்படமாக எடுக்கிறோம் என்று கூறுகிறார்கள். கடற்கரை மணலில், தொப்புளைக் காட்டி மினுக்கிக் கொண்டு போவதுதான்யதார்த்தமா? நிஜத்தில் அப்படி யாராவது போகிறார்களா?
படுக்கையறைக் காட்சிகளை மற்றவர்கள் பார்க்கும்படி, பச்சையாக எடுப்பதுதான் யதார்த்தமா? இப்படியெல்லாம் எடுக்காதீர்கள்,மாற்றிக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம். யாரையும் நாங்கள் மிரட்டவில்லை.
காதலர் தினம், அழகிப் போட்டி என்று ஆங்கில கலாச்சாரத்தின் வெளிப்பாடுகள்தான் இங்கு அதிகம் கொண்டாடப்படுகின்றன.ஆங்கிலத்தை அடக்கினா இவையெல்லாம் ஒடுங்கி விடும். நாங்கள் அன்னையர் தினம் கொண்டாடப் போகிறோம்.
முன்பெல்லாம் நான் ராமதாஸ் என்றுதான் எழுதி வந்தேன். ஆனால் கடந்த ஒரு வருடமாக இராமதாசு என்றுதான் என் பெயரைஎழுதி வருகிறேன். இராமதாசு என்பது தமிழ்ப் பெயர்தான் என்றார் ராமதாஸ்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications