பாம்குரோவ்: கொலையாளி வாக்குமூலம்
சென்னை:
10 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய பாம்குரோவ் ஓட்டல் அதிபர் மாணிக்கராஜ் பலால் மறுத்ததால், அவரைக் கொலை செய்ததாகதொழிற்சங்க தலைவர் மாயாண்டி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மாணிக்கராஜ் பலாலைக் கொலை செய்து விட்டு தலைமறைவான அதிமுகவைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவரும் ஹோட்டல்ஊழியருமான மாயாண்டியை, போலீஸார் 6 தனிப்படைகள் அமைத்துக் கைது செய்தனர். பலாலைக் கொன்றதற்கான காரணம் குறித்துமாயாண்டி போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
வாக்குமூல விவரம் வருமாறு:
சிவகங்கையைச் சேர்ந்த நான் 13 வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டேன். பாம்குரோவ் ஓட்டலில் கடந்த 23 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகிறேன். ஓட்டலின் தொழிற்சங்கத் தலைவராகவும் இருக்கிறேன்.
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக கடந்த 15 தினங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சினைஏற்பட்டது. அது காவல் நிலையம் வரை சென்றது. கூடுதல் துணை கமிஷனர் கலியமூர்த்தி விசாரணை நடத்தி, இனி பிரச்சினைசெய்யக்கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டார்.
ஆனால் 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சம்பளத்தை கூட்டிக் கொடுக்கபலால் ஒத்துக் கொண்டார்.
முன்னதாக 10 ஊழியர்களை நிரந்தரமாக்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் தலா ரூ.10,000 வாங்கியிருந்தேன். பேச்சுவார்த்தையின்போதுஇதுகுறித்து யாரும் பலாலிடம் பேசவில்லை.
இதனால் 10 ஊழியர்களுக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த தினத்தன்று காலை பலால்ஓட்டலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். சமையலறையில் வைத்து 10 பேரை நிரந்தரமாக்கும்படி கூறினேன். அவர் மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நான் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரது தலையில் வெட்டினேன். அவர் தலையை சரித்துக்கொண்டதால், இடது தோளில் வெட்டு விழுந்தது. மீண்டும் வெட்டினேன். அதைத் தடுக்க பலால் முயற்சித்ததால், அவரது விரல்கள்அனைத்தும் துண்டாயின.
மீண்டும் அவரை வெட்ட முயற்சித்தபோது, ஸ்டோர் பொறுப்பாளர் ராகவேந்தர் என்னைத் தடுக்க முயற்சித்தார். இதில் அவரும்காயடைந்தார். அதற்குள் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் ஓடி வந்தனர். நான் கையில் இருந்த அரிவாளைக் காட்டி தப்பித்தேன் என்றுகூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications