பி.எஃப் பட ஷூட்டிங்கை தடுத்து நிறுத்திய விடுதலை சிறுத்தைகள்
சென்னை:
சென்னை விஜிபி கடற்கரைப் பகுதியில் நடந்த பி.எஃப் படத்தின் சூட்டிங்கை விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தடுத்துநிறுத்தினர்.
நிலா என்ற புதிய ஹீரோயினுடன் எஸ்.ஜே. சூர்யாவே நடித்து இயக்கி வரும் படம் இது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நிறுவியுள்ள தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் பாமக, மூவேந்தர் ன்னேற்றக் கழகம்,தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் திரைப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ் பாதுகாப்புஇயக்கம் வலியுறுத்தி வருகிறது.
கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ், எஸ்.ஜே. சூர்யாவின் பி.எஃப் ஆகிய படங்களின் பெயர்களை தமிழில் மாற்றுமாறுஇருவருக்கும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்தது. ஆனால் இருவரும் அதை ஏற்க மறுத்து விட்டனர்.
இந் நிலையில், பி.எஃப் படப்பிடிப்பு சென்னை விஜிபி கடற்கரைப் பகுதியில் நடந்தது. அந்த இடத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள்துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செழியன் தலைமையில் தொண்டர்கள் வந்தனர்.
படப்பிடிப்பை தடுத்து நிறுத்திய அவர்கள், படத்தின் பெயரை தமிழில் மாற்ற வேண்டும் என்றனர்.
அவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா சமரசம் பேசினார். தங்களது தலைவர் திருமாவளவனுடன் பேசுமாறும், படத்தின் பெயரை தமிழில்மாற்றும் விடுதலை செழியன் வலியுறுத்தினார்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் விடுதலைச் சிறுத்தையினர் அங்கிருந்து சென்றனர். இதனால் படப்பிடிப்புநிறுத்தப்பட்டது.
பின்னர் சூர்யா நிருபர்களிடம் கூறுகையில், எனது படத்திற்கு முதலில் பெயர் வைத்தபோது யாரும் எதிர்க்கவில்லை. ஆனால்இப்போது பெயர் பிரபலமான நிலையில் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையை முதல்வர் ஜெயலலிதா பார்த்துக் கொள்வார். ஏற்கனவே அவர் இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.எனது படத்தின் பெயரை மாற்றுவதாக விடுதலைச் சிறுத்தையினருக்கு உறுதிமொழி எதையும் நான் தரவில்லை. திருமாவளவனைசந்தித்துப் பேசுவதாக மட்டும் உறுதியளித்தேன் என்றார் சூர்யா.
இதற்கு முன் கமல்ஹாசனின் விருமாண்டி (அப்போது சண்டியர்) படப்பிடிப்பை புதிய தமிழகம் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.இதைத் தொடர்ந்து தனது வெளிப்புறப் படப்பிடிப்புகளை முழுவதுமாக ரத்து செய்த கமல்ஹாசன், சென்னையில் செட் போட்டுமொத்தப் படத்தையும் எடுத்து முடித்து வெளியிட்டது நினைவிருக்கலாம்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications