பெண் நடனக் கலைஞரை தூதராக அனுப்பிய ஜெயேந்திரர்
சென்னை:
திருக்கோஷ்டியூர் மாதவனை சமாதானப்படுத்துவதற்காக பிரபல பெண் நடனக் கலைஞரை ஜெயேந்திரர் தூதராக அனுப்பினார் எனசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி முருகேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தினகரன் வாதிடுகையில், இந்த வழக்குக்கும் ஜெயேந்திரருக்கும் எந்தவிதத்தொடர்பும் கிடையாது. இது பொய் வழக்கு என்றார்.
அப்போது அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் துரைசாமி எழுந்து, திருக்குறுங்குடி கோவிலில் உள்ள சிவன் சன்னதியை அகற்றஜெயேந்திரர் தூண்டுதலின் பேரில்,டிவிஎஸ் நிறுவன ஊழியர்கள் செயல்பட்டு சிவன் சன்னதியை அகற்றினர்.
இதைக் கண்டித்து மாதவன் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்துவதற்காகசென்னைக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது தனது சார்பில் பிரபல பெண் நடனக் கலைஞர் ஒருவரை ஜெயேந்திரர் மாதவனிடம்அனுப்பினார்.
இதைக் கடுமையாக மாதவன் கண்டித்த காரணத்தால்தான் அவரைத் தாக்கினர். எனவே இந்த வழக்கில் ஜெயேந்திரருக்கு சம்பந்தம் இல்லைஎன்று கூற முடியாது. எனவே ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முருகேசன், நாளை மறுதினம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications