கருணாநிதி நல்ல முடிவெடுப்பார்: காங்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டணி ஆட்சி குறித்த எனது கோரிக்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதி விரைவில் முடிவெடுப்பார் என நம்புவதாக காங்கிரஸ்எம்.பியும், நாடாளுமன்ற நிதித்துறை நிலைக்குழு தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வருகிற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணிஆட்சிதான் அமைக்க வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் எந்தக் கட்சியும் இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று சிலநாட்களுக்கு முன்பு சுதர்சன நாச்சியப்பன் பரபரப்பு பேட்டியளித்தார்.

இவரது கருத்தையொட்டி முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் அடுத்துஅமைய வேண்டும் என்றார்.

காங்கிரஸ் தலைவர்களின் இந்த பேச்சுக்கள், திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் மீண்டும் தனது கூட்டாட்சிகோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் சுதர்சன நாச்சியப்பன்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் தேசியக்கட்சிகளோடு, மாநிலக் கட்சிகள் பங்கெடுத்துள்ளதைப் போல மாநிலங்களிலும் கூட்டாட்சி அமைய வேண்டும் என்று நான் கூறுகிறேன்.கூட்டணி ஆட்சி என்பது அரசியல் தத்துவம்.

மத்தியில் தேசியக் கட்சிகளோடு மாநிலக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதைப் போல, மாநலங்களில் மாநிலக் கட்சிகளோடு தேசியக்கட்சிகளும் இணைந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்க வேண்டும்.

இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் ஜம்முகாஷ்மீர், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில்காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை பகிர்ந்து கொண்டுள்ளது.

தமிழகத்தில் கிராமங்களுக்கு அதிக அதிகாரங்கள் இல்லை. ஆனால் கூட்டணிக் கட்சிகளோடுகாங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு ஏராளமானஅதிகாரங்கள் உள்ளன.

ஒரு தந்தையிடம், மகன் வேண்டுகோள் விடுப்பதைப் போலவே, கூட்டணி ஆட்சி குறித்துபரிசீலிக்குமாறு கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கிறேன். கருணாநிதி முதுபெரும்

அரசியல் தலைவர். என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இன்றைய அரசியல் சூழ்நிலையும் அவருக்குப் புரியும்.

எனது கருத்தை ஏற்று அவர் நல்ல முடிவை எடுக்க வலியுறுத்துகிறேன். இதுதொடர்பாக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது,கூட்டணி நீடிக்கும்.

தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி என இரு அணிகள்தான் இருக்க முடியும்.மூன்றாவது அணிக்கு என்றுமே வெற்றி கிடைக்காது. அதிமுகவுடன் மீண்டும் காங்கிரஸ் சேரும் என்ற பேச்சுக்கே இப்போதைக்குஇடமில்லை.

சுனாமி நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ராணுவத்தினரை முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்ததைக் கண்டித்து தமிழகம் முழுவதும்நாளை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. இங்கு (சென்னை) நடக்கும் போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன் என்றார்சுதர்சன நாச்சியப்பன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+