அதெல்லாம் தானா வரணும்: ஆர்எம்வீ
சேலம்:
நடிகர்களுக்கு தமிழ் உணர்வு தானாக வர வேண்டும், அதை யாரும் ஊட்டி விட முடியாது என்று எம்.ஜி.ஆர். கழகப் பொதுச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சினிமாவுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வேதனை தருகிறது.
தமிழில்தான் நமது படங்களுக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற உணர்வு, நடிகர்களுக்கு இயல்பாகவே வர வேண்டும். விஞ்ஞானவளர்ச்சிக்கேற்ப மக்களின் மன நிலையும் மாறி விட்டது.
தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக படங்களை ஓட விட மாட்டோம் என்று கூறக்கூடாது. அது நியாயமல்ல. சினிமாத்துறை மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் தமிழை நிலைநிறுத்த தமிழ் விழிப்புணர்வு இயக்கம்தேவை.
மிரட்டுப் போக்கை மேற்கொண்டுத்தான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அது பலன் தராது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை, அது தமிழக மக்களுக்கு ஒத்துவராத ஒன்று. இதுதொடர்பான விவாதங்கள் கூடதேவையற்றவை, அவசியமில்லாவை.
அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அனைவரின் மனதிலும் இருக்க வேண்டும். கூட்டணி ஆட்சியா, தனிக்கட்சி ஆட்சியா என்பதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார் ஆர்.எம்.வீரப்பன்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications