"என்றென்றும் சென்னை": பட்ஜெட்டில் புதிய திட்டம்
சென்னை:
சென்னை நகர வளர்ச்சிக்கு "என்றென்றும் சென்னை" என்ற புதிய திட்டம் பட்ஜெட்டில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2005-06ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல்செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
டெல்லியைப் போல சென்னையிலும் மெட்ரோ ரயில் (பாதாள ரயில்) விடப்படும். ரூ. 5,086.85 கோடி செலவு பிடிக்கும் இத்திட்டம் குறித்த ஆய்வை ரயில்வே துறையும் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் மேற்கொள்ளும்.
இதற்கான நிதி திரட்டும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்ளும். இதற்காக ஆரம்பகட்ட நிதியாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை சாலை மேம்பாட்டுக்கு உலக வங்கி உதவியுடன் ரூ. 540 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சென்னை நகர வளர்ச்சிக்கு "என்றென்றும் சென்னை" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
மாநில நெடுஞ்சாலைகள், பெருஞ்சாலைகள், ஊரக சாலைகளை அகலப்படுத்தி, பராமரிக்க ரூ. 750 கோடியும், நெடுஞ்சாலைதுறைக்கு மொத்தமாக ரூ. 2991.47 நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டச் சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 250 கோடியும்,பிரதமரின் கிராமச் சாலை திட்டத்திற்கு ரூ. 160 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் மின் வசதிக்கு ரூ. 241.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன் வளத்துறைக்கு ரூ 79.91 கோடி, ரூ. 567.42கோடி ஜப்பான் உதவியுடன் காடு வளர்ப்பு திட்டம், நீரின் தரத்தை மேம்படுத்த ரூ. 5 கோடி, சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறைக்கு ரூ. 228.44 கோடி ஒதுக்கீடு, ரூ. 200 கோடியில் நமது கிராமம் திட்டம் ஆகியவையும்அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திரா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 37,736 வீடுகள் கட்டவும், 12,265 கச்சா வீடுகளை நிலைஉயர்த்தவும் ரூ. 35.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications