குஜராத் கலவரம்: வாஜ்பாய் மீது கே.ஆர். நாராயணன் திடுக் புகார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்த குஜராத் மதக் கலவரத்தின் பின்னணியில் மத்தியில் ஆட்சியில் இருந்தபா.ஜ.க மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசுகளின் சதி அடங்கியிரிந்ததாக முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.

மதக் கலவரம் கொளுந்துவிட்டு எரிந்தபோது அதைக் கட்டுப்படுத்த பிரதமராக இருந்த வாஜ்பாய் ஒரு நடவடிக்கையும்எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின் 2 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் தனது மெளனத்தை கடும் கோபத்துடன்கலைத்துள்ளார் நாராயணன்.

கேரளத்தில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

கலவரக்காரர்களை சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு உரிய அதிகாரத்தைக் கொடுத்திருந்தால் குஜராத் வன்முறையைகட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதை வாஜ்பாய் செய்யவில்லை.

இது தொடர்பாக நான் கடிதங்கள் அனுப்பினேன், தொலைபேசியிலும் பல முறை பேசி, வலியுறுத்தினேன். ஆனால், அவர் ஒருநடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மதக் கலவரத்தின் பின்னணியில் மத்திய, மாநில அரசுகளின் சதியும் இருந்தது.

கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்புமாறு நான் கோரினேன். பலமுறை சொன்ன பிறகே ராணுவத்தை அனுப்பினார்கள்.ஆனால், அவர்களுக்கு அதிகாரத்தைத் தரவில்லை. கலவரக்காரர்களை சுட்டுத் தள்ள அதிகாரம் தரவில்லை.

இதனால் அங்கு மீண்டும் மீண்டும் மதக் கலவரம் மூண்டது. ராணுவத்துக்கு உரிய அதிகாரம் தந்து அதைத் தடுக்க மத்திய, மாநிலஅரசுகள் முயலவில்லை.

பா.ஜ.க. அரசு பல மறைமுக செயல் திட்டங்களை அமலாக்கி வந்தது. குறிப்பாக, கல்வித்துறையில். பள்ளிப் பாடங்களில்வரலாற்றைத் திருத்தி எழுதினார்கள். கல்வித்துறையை தங்களது கொள்கையைப் பரப்பும் ஆயுதமாக்க முயன்றார்கள்.

இதற்காக சங் பரிவார் ஆதரவாளர்களை சில பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களாக்கினர். அதில் சிலவற்றை நான்அரசியல்சட்ட ரீதியிலும் ஜனநாயகரீதியிலும் தடுத்தேன். நாட்டின் மதசார்பின்மையை நாம் கட்டிக் காக்க வேண்டியதை சுட்டிக்காட்டினேன்.

இதனால் முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களுக்கு என் மீது கோபம் ஏற்பட்டது.

கல்வித்துறையில் அரசின் செயல்பாடுகளை நான் தடுக்க உரிமை உள்ளதா என்பது குறித்து அரசியல் சட்ட நிபுணர்களுடன் பாஜகதலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். எனது செயல்பாடுகள் சட்டப்படியே இருந்தன.

இதனால், நான் மீண்டும் ஜனாதிபதியானால் கல்வியில் மதத்தை புகுத்துவதை தடுப்பேன் என அவர்கள் அஞ்சினார்கள். இதனால்தான் எனக்கு மீண்டும் ஜனாதிபதி பதவி தருவதில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்.

என்னிடம், ஒரு முறைக்கு மேல் யாரையும் ஜனாதிபதியாக்குவதில்லை என்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாகச் சொல்லி,என்னை மீண்டும் ஜனாதிபதியாக்க ஆதரவு தர முடியாது என்று கூறினார்கள்.

தங்களது சித்தாங்களுக்கு நேர் எதிரான ஒருவரை வைத்துக் கொண்டு தங்களது கொள்கைளை கல்வியில் புகுத்த முடியாது என்றுஅவர்களுக்குத் தோன்றியதால், என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து தூக்கிவிட்டு கல்வியில் வேகமாகவே தங்களதுகொள்கைகளை புகுத்த நினைத்தார்கள்.

இந் நிலையில் இடதுசாரிகள் என்னை அணுகி மீண்டும் என்னை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த விரும்புவதாகக் கூறினார்கள்.ஆனால், எங்கிருந்து அதற்கு ஆதரவைத் திரட்டுவீர்கள் என்று கேட்டு அவர்களை நான் திருப்பி அனுப்பி வைத்தேன்.

நான் நேருவின் சோஷலிஸத்தில் நம்பிக்கை கொண்டவன். கம்யூனிஸத்தை கண்மூடி ஆதரிப்பவனோ அல்லது கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவனோ அல்ல.

நான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரளத்தில் ஒட்டப்பாலம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டுஎம்.பினானேன். இதனால் என்னை எதிர்த்தாலும் அரசியல் காரணங்களுக்காக என்னை முதலில் துணை ஜனாதிபதியாக்கவும்பின்னர் ஜனாதிபதியாக்கவும் கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்தனர்.

நான் தீவிர அரசியலில் நுழையக் காரணமாக இருந்தவர் இந்திரா காந்தி. நான் தேர்தலில் போட்டிடுவதை கேரள காங்கிரஸ்தலைவர் கருணாகரன் விரும்பவில்லை. ஆனால், ராஜிவ் தான் என்னை ஒட்டப்பாலத்தில் போட்டியிட வைத்தார்.

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை (நாராயணன் ஒரு ஐஎப்எஸ்அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது). இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி முறை தேவையில்லை. அது ராணுவ ஆட்சி அல்லதுசர்வாதிகார ஆட்சியாகப் போய்விடும்.

ஆனால், இப்போது நாடாளுமன்றத்தின் செயல்பாடும், விவாதங்களின் தரமும் கவலையளிக்கும் நிலைக்குப் போய்விட்டது.

இவ்வாறு நாராயணன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+