ரயில் வராத தண்டவாளத்தில் படுத்தவர் கருணாநிதி: ஜெ. கிண்டலோ கிண்டல் !
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி நடத்திய கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்வகையாக கிண்டலடித்தார். ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்தவர் தான் இந்தக் கருணாநிதி என்றார்ஜெயலலிதா.
பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு இடையே முதல்வர் குறுக்கிட்டுப் பேசுகையில்,
டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றக் கோரி தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்தார்கருணாநிதி என்று திமுகவினர் ரொம்பப் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள்.
உண்மையில், அந்த வழியாகச் செல்லும் ரயில் கிளம்பிப் போன பிறகுதான், இனிமேல் ரயில் வராது என்று உறுதிசெய்த பின்னர் தான் தண்டவாளத்தில் தலையை வைத்தார் கருணாநிதி.
உண்மையில் சொல்லப் போனால், அந்தப் பகுதியில் ஒரே ஒரு ரயில் மட்டுமே அப்போது இயங்கிக்கொண்டிருந்தது. அதுவும் போய்விட்டதா என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் தலையை தண்டவாளத்தில்வைத்தார் கருணாநிதி.
ரயில் வரும்போது தலையை வைத்திருந்தால் அவரது வீரத்தைப் பாராட்டலாம் என்று ஜெயலலிதா கூறியதற்குதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜெயலலிதாவுக்கு பதிலளித்து ஆற்காடு வீராசாமி பேசுகையில்,
ரயில் வருவதைத் தெரிந்துதான் தண்டவாளத்தில் தலைையை வைத்துப் படுத்தார் எனது தலைவர். அவரதுபோராட்டத்தால் ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது தான் உண்மை.
அந்தப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் முதலமைச்சர் பிறந்திருக்கக் கூட மாட்டார் என்று நினைக்கிறேன்என்றார்.
இதைக் கேட்டதும் திமுகவினர் ஆரவாரம் செய்து மேசைகளைத் தட்டினர்.
அப்போது எழுந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், கவியரசு கண்ணதான் தனது வனவாசம் நூலில்இந்தப் போராட்டம் குறித்து விரிவாக எழுதியுள்ளார். கல்லக்குடி போராட்டம் குறித்து திமுகவினர் கூறுவதற்குமுற்றிலும் மாறாக அப்புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
அவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பதை திமுகவினர் மறுக்க மாட்டார்கள். கல்லக்குடிபோராட்டம் குறித்து சபாநாயகருக்கும், இங்கே அமர்ந்துள்ள துரைமுருகனுக்கும் நன்றாகவே தெரியும் என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications