பூகம்பத்தால் 12 செ.மீ. நகர்ந்துவிட்ட இந்தியா!!!
ஹைதராபாத்:
டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் இந்தியத் துணைக் கண்டமே ஒட்டுமொத்தமாக இந்தோனேஷியாவைநோக்கி 12 செ.மீ. அளவுக்கு நகர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தேசிய நிலவியல் ஆராய்ச்சி மையம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
பூகம்பம் நிகழ்ந்தவுடனேயே அந்தமான், நிகோபார் தீவுகள் சில மீட்டர்கள் அளவுக்கு தென்மேற்காக நகர்ந்தது தெரியவந்தது.
இந் நிலையில் இந்திய நிலப்பரப்பும் 12 செ.மீ. அளவுக்கு இந்தோனேஷியாவை நோக்கி நகர்ந்துள்ளதை சாட்டிலைட்உதவியுடனான நிலவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளது.
பூமிக்கு மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ள குளோபல் பொசிஷனிங் செயற்கைக் கோள்களின் உதவியால் இந்த நகர்வு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட தேசிய நிலவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் வினீத் கஹாலத்கூறுகையில்,
பெங்களூருக்கும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள மேடன் என்ற இடத்துக்கும் இடையிலான தூரம் 12 செ.மீ.குறைந்துவிட்டதை செயற்கைக் கோள்கள் உறுதி செய்கின்றன.
மேலும் தென்னிந்தியாவின் பல பகுதிகள் கிழக்குப் பக்கமாக 10 மி.மீ. அளவுக்கு நகர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார்.
மீண்டும் மாபெரும் பூகம்கம்:
இதற்கிடையே கடலுக்கு அடியில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே மீண்டும் பெரும் பூகம்பம் ஏற்படவாய்ப்பிருப்பதாக பிரிட்டிஷ் பல்கலைக்கழக நிலவியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
டிசம்பர் 26ம் தேதி சுமத்ரா தீவுக்கு அருகே இந்து மகாக் கடலில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 9.0 என்றஅளவுக்கு அந்த பூகம்பம் பதிவானது. தொடர்ந்து அப் பகுதியில் நிலநடுக்கங்கள் நேர்ந்தவண்ணம் உள்ளன.
இந் நிலையில் சுமத்ராவின் மேற்குக் கடற்கரையையொட்டி மீண்டும் மாபெரும் தாக்குதவற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகஅல்ஸ்டர் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் நிலவியல் ஆராய்ச்சிப் பிரிவின் பேராசிரியர்களான ஜான் மெக்லோஸ்கிஎச்சரித்துள்ளார்.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.5 என்ற அளவில் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார். அதிகபட்சமாக 8.5 என்றஅளவில் கூட பூகம்பம் ஏற்பட்டு பாண்டார் ஏக் பகுதியை சுனாமி தாக்கலாம் என்றும் எச்சரித்திருக்கிறார்.
டிசம்பர் 26ல் ஏற்பட்ட மாபெரும் பூகம்பம் காரணமாக சுமத்ரா பகுதியில் இரு நிலப் படுகைகள் மீது அதிகமான அழுத்தம்ஏற்பட்டு வருகிறது.
இந்த அழுத்தம் எந்த நேரத்திலும் அதிசக்தியாக மாறி, பெரும் அதிர்வாக நிலத்திலிருந்து வெளியேறலாம் (பூகம்பமாக) என்றுஅவர் கூறியுள்ளார்.
இந்த இரு நிலப்படுகைகளிலும் 1833 மற்றும் 1861ல் பெரும் பூகம்பம் உருவாகி, சுனாமி அலைகள் ஏற்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications