ரயில் என்ஜினில் அடிபட்டு 80 ஆடுகள் பலி
திருச்சி :
திருச்சி அருகே இன்று ரயில் என்ஜினில் அடிபட்டு 80 ஆடுகள் பலியாயின. ஆடுகளின் ரத்தம் சுமார் 300 மீட்டர் தூரத்திற்குபரவியிருந்ததால் அப்பகுதியே ரத்தக் களறியாகக் காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் வேலு. ஊர் ஊராக சென்று ஆடுகளை வாங்கி வளர்த்து வருகிறார். இன்றுகாலை இவர் தனது 120 செம்மறி ஆடுகளையும் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் ரயில்வே மேம்பாலத்துக்கு அடியில் ஆடுகள் சென்று கொண்டிருந்தன. பின்னர் அந்த ஆடுகள்தண்டவாளத்தில் ஏறின.
அப்போது திருச்சியில் இருந்து லால்குடி நோக்கிச் சென்ற ரயில் என்ஜின் இந்த ஆடுகள் மீது ஏறியது.
இதில் மொத்தம் 80 ஆடுகள் என்ஜினில் சிக்கி பலியாயின. என்ஜினில் நசுங்கி உருக்குலைந்து போன ஆடுகளின் ரத்தம் சுமார் 300மீட்டர் தூரத்திற்கு பரவியிருந்தது. இதனால் அப் பகுதியே ரத்தக்களறியாகக் காணப்பட்டது.
இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.












Click it and Unblock the Notifications