குடந்தை: சம்பத் கமிஷன் விசாரணைக் காலம் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் பள்ளிக் கூட தீவைப்பு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் விசாரணைக் காலம் மேலும் 2 மாதங்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் தனியார் பள்ளிக் கூடத்தில் நடந்த தீவிபத்தில் 90 குழந்தைகள் உயிருடன் கருகி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும்,எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்கவும், நீதிபதி சம்பத் கமிஷனை தமிழகஅரசு அமைத்தது.
இந்தக் கமிஷனின் விசாரணைக் காலம் 6 மாதமாக முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 2மாதங்கள் நீட்டிக்கப்பட்டு மே 20 ம் தேதி வரை விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications