சேலம், தர்மபுரி, விழுப்புரத்தில் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

இம் மாவட்டங்களில் காலை 7 மணி முதல் 7.20 வரை விட்டுவிட்டு 7 வினாடிகளுக்கு சிறு சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டன.

தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும், சேலம் மாவட்டம் வாழப்பாடி உள்ளிட்ட சிலபகுதிகளிலும், விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் இன்று காலை இந்த லேசான நிலஅதிர்வை உணர முடிந்தது.

இதனால் மக்கள் வீடுகளைவிட்டு பீதியுடன் தெருக்களுக்கு ஓடி வந்தனர். நில அதிர்வுக்கு முன்பாக பயங்கர வெடிச் சப்தமும்கேட்டதாக வாழப்பாடி மக்கள் கூறுகின்றனர்.

இந் நில அதிர்வால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாத தகவல் இல்லை.

நில அதிர்வு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சேலம் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.ரிக்டர் அளவுகோளில் இது 3.6 என்ற அளவுக்கு பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையத்தின் நிலவியல் பிரிவு அதிகாரிமாதேஸ்வரன் தெரிவித்தார்.

சுனாமிக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் தற்போது மேலும் சிலமாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+