இங்கிலாந்து பயணம்: மோடிக்கு மீண்டும் சிக்கல்
லண்டன்:
அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மேலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 26ம் தேதிஇங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று லண்டனிலுள்ள சில அமைப்புகள்எச்சரித்துள்ளன.
குஜராத் வன்முறைக்கு காரணமாக இருந்ததாக மோடியை குற்றம் சாட்டிய அமெரிக்கா அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டது.
இதனால் அவர் இங்கிருந்தபடியே டெலிகான்பரன்சிங் மூலம் நியூஜெர்சியில் குஜராத்திகள் மத்தியில் உரையாற்றினார். இந்தசர்ச்சை ஓய்ந்து வரும் நிலையில் மோடிக்கு மீண்டும் ஒரு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மோடி, இங்கிலாந்துக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார். அவர் 26ம் தேதி லண்டனில் நடக்கும்குஜராத் தினம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந் நிலையில் மோடி லண்டன் வரும்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று தெறகாசிய மதசார்பற்றஅமைப்புகள் மற்றும் சில சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த நிகழ்ச்சி நடக்கும் ராயல் ஆல்பர்ட் அரங்கத்திற்குவெளியேயும், அவர் செல்லும் மற்ற இடங்களிலும் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த அந்த அமைப்பினர்திட்டமிட்டுள்ளனர்.
இங்கிலாந்து வந்ததும் மோடியை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். மோடி மீது கோர்ட்டில்வழக்கு தொடரப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இங்கிலாந்து அரசு மோடிக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு உட்பட்டுத் தான் நடவடிக்கைஎடுக்க முடியும். சட்டம்- ஒழுங்கு சீர் குலையும் வகையில் சம்பவங்கள் நடந்தால் அப்போது உள்துறை இலாகா நடவடிக்கைஎடுக்கும் என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
டெல்லியிலுள்ள இங்கிலாந்து தூதரக அலுவலக அதிகாரி ஜெப் வில்சனும் இதே கருத்தையே கூறியுள்ளார். அவர் கூறுகையில்,"மோடிக்கு இங்கிலாந்து அரசு விசா வழங்கியுள்ளது. இதனால் அவர் இங்கிலாந்தில் எங்கு செல்வதற்கும் தடையில்லை.
மோடிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தும் தடை விதிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது எப்படிமுடியும்? அமெரிக்க நாட்டின் சட்டம் வேறு, எங்கள் நாட்டின் சட்டம் வேறு.
எங்கள் நாட்டு சட்டப்படி அவருக்கு விசா வழங்காமல் இருப்பதற்கு தகுந்த காரணம் எதுவுமில்லை என்றார்.
இங்கிலாந்திலுள்ள மோடியின் ஆதரவாளர்கள் இது குறித்து கூறுகையில், "சாதரண ஒரு பிரச்சினையை தேவையில்லாமல்பெரிதுபடுத்துகிறார்கள். மோடியின் வருகையால் எந்தக் குழப்பமும் ஏற்படாது. ஏற்கனவே இவர்கள் போட்ட வழக்கு கோர்ட்டில்தள்ளுபடி ஆகிவிட்டது என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications