சுனாமி: 1.3 லட்சம் பேருக்கு புதிய வீடுகள்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்படு, வீடுகளை இழந்த 1.30 லட்சம் பேருக்கு தலா ரூ. 1.5 லட்சம் செலவில் நிரந்தர வீடுகளை தமிழக அரசுகட்டிக் கொடுக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் சுனாமி நிவாரணப் பணிகள் குறித்து ஜெயலிதா அறிக்கை வாசித்தார். அப்போது, சுனாமியால் பாதிக்கப்பட்டுவீடுகளை இழந்த 1.30 லட்சம் பேருக்கு ரூ 1.5 லட்சம் செலவில் தரமான, நிரந்தர, கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
அதுமட்டுமல்லாது, ஓரளவு சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்க அல்லது புதுப்பித்துக் கட்டிக் கொள்ள ரூ. 20,000 முதல் ரூ.75,000 வரை வழங்கப்படும்.
புதிதாக கட்டிக் கொடுக்கப்படும் வீடுகள், கடலோரத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டப்படும். சென்னை, திருவள்ளூர்மாவட்டங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக இந்த வீடுகள் இருக்கும்.
இந்த வீடுகளைக் கட்டும் திட்டத்திற்கு ரூ. 1,950 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியைமத்திய அரசும், பல்வேறு அமைப்புகளும் தரும் என்று எதிர்பார்க்கிறோம்.
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ. 902 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications