கோவிலுக்குள் காவலாளி வெட்டிக் கொலை!
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் சிவன் கோவில் வளாகத்தில், இன்று காலை கோவில் காவலாளி அடையாளம்தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
திருவெண்ணை நல்லூர் சிவன் கோவில் மிகவும் புகழ் பெற்ற பழமையான கோவிலாகும். இந்தக் கோவிலில் காவலாளியாகபணியாற்றி வந்தவர் சண்முகம். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சண்முகம் இன்று காலை வழக்கம் போல பணியில் இருந்தார்.
அப்போது கோவிலுக்குள் வந்த ஒரு கும்பல், சண்முகத்தை சரமாரியாக தாக்கியது. அரிவாள் மற்றும் கட்டைகளால்தாக்கப்பட்டதால், தலையில் படுகாயம் ஏற்பட்டு சண்முகம் சம்பவ இடத்திலேயே பிணமானார்.
சிவன் கோவிலுக்குள் நடந்த இந்த பயங்கர கொலைச் சம்பவம் திருவெண்ணைநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கொலைக் கும்பல், கொள்ளை முயற்சியில்ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவிலுக்கு போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது காவலாளிபடுகொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications