முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி
கொச்சி:
கொச்சியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டன. முதல் போட்டியில் இந்தியாவும்,இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சம நிலையில்முடிவடைந்தது.
இந் நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் கொச்சியில் இன்று தொடங்கியது. டாசில் வெற்றிபெற்ற இந்திய அணியின் கேப்டன் கங்குலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், டெண்டுல்கரும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே இந்திய அணிக்குஅதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரிலேயே 4 ரன்கள் எடுத்த நிலையில் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கங்குலி, முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால் இதன் பிறகு ஜோடி சேர்ந்த ஷேவாக்கும், திராவிட்டும் அபாரமாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்த பிறகு தான் ஆட்டமிழந்தனர். திராவிட் 104 ரன்களிலும், ஷேவாக் 108 ரன்களிலும்ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது.
இதன் பிறகு ஆடத் தொடங்கிய பாகிஸ்தானின் விக்கெட்டுகள் தொடக்கம் முதலே சரியத் தொடங்கின. இறுதியில் 45.2 ஓவர்களில்பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்கள் எடுத்தது.
இதனால் இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் டெண்டுல்கர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications