போப் மரணம்?: வாடிகன் மறுப்பு
வாடிகன்:
போப் இரண்டாம் ஜான் பாலின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. அவர் மரணமடைந்ததாக வெளியான செய்தியைவாடிகன் மறுத்துள்ளது.
போப் ஆண்டவரின் உடல்நிலை கடந்த மாதம் இரண்டு முறை பாதித்தது. ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் தொண்டையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, சில வாரங்களுக்கு முன் அவர் வாடிகன் திரும்பினார். இந் நிலையில் போப்பின்உடல்நிலை நேற்று முன்தினம் இரவு திடீரென பாதித்தது.சிறுநீர் குழாயில் தொற்று நோய் கிருமிகள் பரவின.
இதன் காரணமாக, காய்ச்சல் அதிகரித்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், மருத்துவமன்ைகு செல்ல போப் மறுத்தார். வாடிகன் இல்லத்திலேயே சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்தார். இதனால்வாடிகன் இல்லத்தில் அவருக்கு முழு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாக வாடிகன் தகவல் தொடர்பாளர் ஜேக் வால்ஸ் கூறினார். இது குறித்துஅவர் மேலும் கூறுகையில், இன்று காலை போப்பின் உடல்நிலை மேலும் பாதித்தது. அவர் சுய நினைவுடனும், தெளிவாகவும்,அமைதியாகவும் இருக்கிறார், என்றார்.
பொதுவாக, போப்பின் உடல்நிலை குறித்த முழு விவரங்களை வாடிகன் வெளியிடுவதில்லை. முதல்முறையாக அவருடையஉடல்நிலை பற்றிய முழு விவரத்தை நேற்று வெளியிட்டது. உலகம் முழுவதும் பரவியுள்ள 110 கோடி கத்தோலிக்ககிறிஸ்தவர்களை போப்பின் மரணத்துக்கு தயாராக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருந்தது.
போப் உடல்நிலைப் பற்றிய தகவலால், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கவலை அடைந்துள்ளனர். அவருக்காக சிறப்புபிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது. போப் உடல்நிலை பற்றி தகவல் வெளியானதும் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில்ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர்.
அவர் உடல் நலம் தேற மவுன பிரார்த்தனை நடத்தினர். போப்பின் உடல்நிலை குறித்து மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என்றுநேற்று மதியம் வாடிகன் கூறியது. அதன்படி, மாலையில் நிருபர்களை சந்தித்த வாடிகன் தகவல் தொடர்பாளர், போப் உடல்நிலைமோசமடைந்துள்ளது. ஆனாலும் அவர் ஸ்திரமாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இத்தாலி பத்திரிகைகளும், டிவிக்களும் நேற்று முன்தினம் இரவு முதல் போப்பின் உடல்நிலை பற்றி மாறுபட்டதகவல்களை வெளியிட்டு வருகின்றன. "இறப்பதற்கு முன் செய்யப்படும் இறுதிச் சடங்குகள் போப்புக்கு செய்யப்பட்டு வருவதாகஇத்தாலி டிவி ஒன்று தெரிவித்தது.
போப் மரண படுக்கையில் இருப்பதாகவும், கோமா நிலையில் இருப்பதாகவும் வேறு சில டிவிக்களும், பத்திரிகைகளும்தெரிவித்தன. கோமா நிலையில் போப் இருப்பதாக கூறப்பட்ட தகவலை வாடிகன் மறுத்துள்ளது.
போப்பின் உடல்நலன் மோசமாக பாதித்ததும் ரோமைச் சேர்ந்த 84 வயதான கார்டினல் கமில்போ ருய்னி, இன்று காலைவாடிகனுக்கு வந்தார். போப்புக்கு மரணம் ஏற்பட்டால் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் இவர்.போப்புக்காக உலகம் முழுவதும் பிரார்த்தனையை தீவிரப்படுத்தும்படி இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications