எஸ்.ஏ. ராஜா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
மதுரை:
ஆலடி அருணா கொலை வழக்கில், கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ.ராஜாவின் ஜாமீன் மனு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆலடி அருணா கொலைவழக்கில் முக்கியக் குற்றவாளியான வேல்துரை கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபலகல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ.ராஜா கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் கோரி முதலில் தென்காசி நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.இரண்டிலும் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தையும் அணுகினார். அங்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிசொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், சங்கரராமன் கொலை வழக்கில், ஒருவர் கொடுக்கும்வாக்குமூலத்தை வைத்து யாரையும் கைது செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அது ராஜா வழக்குக்கும்பொருந்தும்.
வேல்துரை கொடுத்த வாக்குமூலத்தைக் கொண்டு ராஜாவைக் கைது செய்ய முடியாது. மேலும் அவருக்கு தற்போது 67வயதாகிறது. இதய நோய் உள்ளவர். சிறையில் 62 நாட்களைக் கழித்து விட்டார். எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், ஜெயேந்திரர் வழக்குடன் இதை ஒப்பிடக் கூடாது. பட்டப் பகலில் திட்டமிட்டுசெய்யப்பட்டக் கொலை இது. கொலையாளிகளுக்கு ராஜா பணம் கொடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இவற்றுக்கானஆதாரங்கள் தெளிவாக உள்ளது என்றார்.
இதை ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம், ராஜாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications