For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போப் ஆண்டவர் மரணம்: உலக தலைவர்கள் இரங்கல்

By Staff
Google Oneindia Tamil News

வாடிகன்:

Pope John Paulதீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் போப் ஆண்டவர் காலமானார். இந்த தகவலை நேற்று நள்ளிரவு வாடிகன் அறிவித்தது.

போப் ஆண்டவரின் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக மிகவும் மோசமடைந்து இருந்தது. மருத்துவமனைக்குச் செல்ல அவர்மறுத்ததால், அவருடைய வாடிகன் இல்லத்திலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் காலையிலிருந்தே அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாயின.இத்தாலிய பத்திரிகைகளும் "டிவிக்களும் போப் உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்களை வெளியிட்ட வண்ணம் இருந்தன.

அவர் நினைவிழந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. போப்பின் உடல்நிலை குறித்து "டிவிக்களும்,பத்திரிகைகளும் உறுதிப்படுத்தாத தகவல்களை கூறியபோதும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வாடிகன் மட்டுமேவெளியிடமுடியும்.

ஆனால், வாடிகன் தரப்பில் அவரது உடல்நிலை மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டது. ஆனால்முக்கிய செய்தி ஏஜென்சிகளும், டி.வி.க்களும் போப் மரணமடைந்து விட்டதாக செய்தியை வெளியிட்ட போதிலும், போப்பின்மறைவு குறித்து வாடிகன் தரப்பில் ஏதும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், போப் இரண்டாம் ஜான்பால் காலமானார் என்று நேற்று நள்ளிரவு வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.வாடிகன் வெளியிட்ட செய்தி குறிப்பில்," புனித தந்தை இரண்டாம் ஜான்பால் இன்று(நேற்று) இரவு 09:37 மணிக்கு (இந்தியநேரப்படி நேற்று நள்ளிரவு 1.07 மணிக்கு ) அவரது இல்லத்தில் காலமானார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த போப் ஆண்டவரின் வயது 84. இவரது உடல் நாளை மறுதினம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றுவாடிகன் அறிவித்துள்ளது. மேலும் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டுஅரசு போப்பின் மறைவிற்கு 3 நாள் துக்கம் அனுஷ்டித்துள்ளது.

மறைந்த போப் இரண்டாம் ஜான் பால் மக்களின் போப் என பிரதமர் மன்மோகன்சிங் தனது இரங்கல் செய்தியில்தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் மதங்களிடையே இருந்த வேற்றுமையை நீக்குவதிலும், மனித நேயத்தினைவளர்ப்பதிலும் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், போப் ஆண்டவரின் மறைவிற்கு ஐக்கிய நாட்டு சபை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதன்பொதுச்செயலாளர் கோபி அன்னன் தெரிவிக்கையில், போப் ஆண்டவர் உலக அமைதிக்காக பெரிதும் பாடுபட்டவர் எனத்தெரிவித்துள்ளார். இதே போல் ஐக்கியநாட்டு பொதுச்சபையின் தலைவர் ஜீன் பிங்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார்.

போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கொல்கத்தா மிஷனரிஸ் ஆப் சேரிட்டி சகோதரிகளின் தலைமைக்கண்காணிப்பாளர் சகோதரி நிர்மலா, வாடிகனுக்கு புறப்படவுள்ளார். இதனை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X