சேலம்: ராமதாஸை கிண்டல் செய்து போஸ்டர்கள்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் ராமதாசை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மற்றும் வாழப்பாடி பகுதியில் பல இடங்களில் வாழப்பாடியார் வன்னியர் பாசறை என்ற பெயரில் டாக்டர் ராமதாஸைகிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி படத்துடன் உள்ள அந்த போஸ்டரில், "சாதிப்போர் ஓய்ந்து விட்டதா? மீண்டும் மொழிப் போரா?தமிழ் இனமே சிந்தியுங்கள். இவண் வாழப்பாடியார் வன்னியர் பாசறைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸை கிண்டல் செய்து ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications