ரூ. 200 கோடி ஏப்பம்: வரதராஜுலுவின் காவல் நீடிப்பு
சென்னை:
இந்தியன் வங்கியில் போலி நிறுவனங்களின் பெயரில் ரூ. 200 கோடி வரை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வரதராஜுலுவைஏப்ரல் 29ம் தேதி வரை காவலில் வைக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூரைச் சேர்ந்தவர் வரதராஜுலு. இவர் போலியான நிறுவனங்களின் பெயரில், இந்தியன் வங்கிக் கிளைகள் பலவற்றில் ரூ. 200 கோடிவரை கடன் பெற்று விட்டுத் தலைமறைவானார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவான இவரைப் பிடிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் வரதராஜுலு,மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளிலும் தலைமறைவாகிக் கொண்டிருந்தார். அவரைப் பிடிக்க இன்டர்போல் போலீஸாருக்கும்தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் துபாயில் வரதராஜுலு தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து ஒரு சிபிஐ தனிப்படைதுபாய் விரைந்து சென்று வரதராஜுலுவை கைது செய்தது.
அவரை நீதிபதி தட்சிணாமூர்த்தி ஒரு நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். இதைத் தொடர்ந்து வரதராஜுலுவைசிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, வரதராஜுலுவை ஏப்ரல் 29ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்துஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications