போப் இறுதிச் சடங்கில் ஷெகாவத் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
ரோம் & டெல்லி & சென்னை:
![]() |
மறைந்த புனித போப் ஜான் பாலின் இறுதிச் சடங்கில் பங்கேற்க துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் தலைமையில் உயர் மட்டஇந்தியக் குழு வாடிகன் நகருக்குச் செல்கிறது.
இந் நிலையில் போப்புக்கு தமிழக, பாண்டிச்சேரி சட்டமன்றங்கள் இன்று மெளன அஞ்சலி செலுத்தின.
தமிழக சட்டசபை இன்று கூடியதும் சபாநாயகர் காளிமுத்து இதற்கான அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அவர் கூறுகையில், கடந்த 27ஆண்டுகளாய் மதத்தின் புனிதத்தையும் மனிதாபிமானத்தையும் அன்பையும் பரப்பிய போப் ஜான் பாலின் மறைவு ஈடு செய்ய முடியாதபெரும் இழப்பு என்றார் காளிமுத்து.
இதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மறைந்த போப்புக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
அதே போல புதுவை சட்டசபையிலும் போப்புக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.













Click it and Unblock the Notifications