தமிழகத்தில் தொடர்ந்து கனமழை: முன்னாள் எம்எல்ஏ உட்பட 17 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் சுவர்இடிந்து விழுந்து முன்னாள் எம்.எல்.ஏ.பலியானார்.

தமிழ்நாட்டில் இம்முறை கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே கத்திரி வெயில் கொளுத்த தொடங்கியது. மார்ச் மாததொடக்கத்திலேயே சென்னை, வேலூர் உட்பட பல பகுதிகளில் 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் சுட்டெரித்தது.

இந் நிலையில் வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால், சென்னை உட்படதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கனமழை பெய்யத் தொடங்கியது.

பொதுவாக மழைக்காலங்களில் கூட தூறல் கூட எட்டிப்பார்க்காத வறட்சிப் பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 120 மி.மீ.மழை பெய்தது.

இதே போல கடலூர், நாகை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம் உட்பட பலமாவட்டங்களில் கடந்ச ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி, கடலூர், நாகை உட்பட பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாககாணப்பட்டது. கன்னியாகுமரியில் தூத்தூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான விசைப்படகுகள் சேதமடைந்தன.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். திருநெல்வேலிமாவட்டத்தில் பலத்த காற்றால் வீட்டின் முன் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில், மின்சாரம் தாக்கி கண்ணம்மாள் என்றபெண்ணும், அவரது மகளான சின்னத்தாயும் இறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவரும், தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி தந்தையும்,மகனும் இறந்தனர். மேலும் இம்மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பில் சிக்கி மீனவர் ஒருவர் இறந்தார்.

முன்னாள் திமுக எம்.எல்.ஏ.பலி:

சென்னையில் பலத்த மழைக்கு சுவர் இடிந்து விழுந்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ.ஸ்ரீதர் பலியானார். சைதாப்பேட்டைசின்னமலையில் வசித்து வந்த அவர், நேற்று மாலை தனது வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்காக வெளியே வந்தார்.

அப்போது அருகில் இருந்த ஒரு தொழிற்சாலை காம்பவுண்டு சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்தகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

இதே போல சென்னையை அடுத்த போரூரில் சுவர் இடிந்து விழுந்து 9 வயது சிறுவன் பலியானான். மேலும் தூத்துக்குடியில்தேங்கிக் கிடந்த மழை நீரில் மூழ்கி ஒரு சிறுவனும், செய்யாறு அருகே இடி தாக்கி ஒரு பெண்ணும் பலியானார்கள்.

2 நாள் மழை நீடிக்கும்:

இதற்கிடையே தற்போது பெய்து வரும் கனமழை மேலும் 2 நாள் நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், தமிழகத்தை ஒட்டி தென்மேற்குவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+