For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூரில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

மேட்டூர் அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அருகே உள்ள பி.என்.பட்டி பஞ்சாயத்து அதிமுக அவைத் தலைவராக இருந்தவர் முனுசாமி (வயது 48). இவர் இங்குள்ளஒரு தனியார் கெமிக்கல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இன்று அதிகாலை இவர் பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன்வழிமறித்த ஒரு மர்ம கும்பல் முனுசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

இதில் முனுசாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்து முனுசாமியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X