ரஜினியின் அடுத்த படம் எது?: ரயில்வே தேர்வில் கேள்வி
சென்னை:
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்? என்று ஒரு படத்தில் மயில்சாமியிடம் குயிஸ் போட்டி நடத்துவார் விவேக்.
கிட்டத்தட்ட அதேரீதியில் ரயில்வேயில் மூத்த விளம்பர ஆய்வாளர் (Senior publicity officer) பதவிக்கு நடத்தப்பட்டதேர்விலும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அந்த கேள்வி ரஜினி குறித்தது.
![]() |
எம்.ஏ. ஜர்னலிசம் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இத் தேர்வெழுத தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்வி அனைவரையும் புல்லரிக்க வைத்தது. அந்த கேள்வி இது தான்:
ரஜினி நடித்து விரைவில் வெளியாக உள்ள படத்தின் பெயர் என்ன?
1. ஜக்குபாய்
2. சந்திரமுகி
3. ஜி
4. மூன்றுமே அல்ல
இது எப்படி இருக்கு?
![]() |
சந்திரமுகி மொட்டை:
ரஜினியின் சந்திரமுகி வெற்றிக்காக நேர்த்திக் கடன், விரதம் என்று ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் புறப்பட்டுள்ள நிலையில், கோவை,மேட்டுப்பாளையத்தில் சந்திரமுகி மொட்டை பேமஸாகி வருகிறது.
முடியை ஒட்ட வெட்டிவிட்டு, பின் பக்கத்தில் சந்திரமுகி என்ற எழுத்தை முடியை மழித்து எழுதி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
ரஜினி ரசிகர்களின் "மிரட்டல்" போஸ்டர்!
இதற்கிடையே சந்திரமுகி படத்திற்காக திருச்சி ரஜினிகாந்த் ரசிகர்கள், 125 அடி நீள பிரமாண்ட போஸ்டரை ஒட்டி திருச்சியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும், இப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தைபிரமாண்ட வெற்றியாக்க ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
திருச்சியில் ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பதால் அங்கு ஏற்பாடுகளும் படு அமர்க்களமாக உள்ளன.
ரஜினியின் முரட்டு பக்தர்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், சந்திரமுகி ஸ்டில்கள் இடம் பெற்றுள்ளன.இதைத் தவிர கலைத் தாயைக் காக்கும் சந்திரமுகிலனே என்றும் ரஜினியை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
முத்து படத்தில் சாரட் வண்டியில் வரும் ரஜினியின் படமும் பிரமாண்டமாக இடம் பெற்றுள்ளது. திருச்சி நகரில் இந்த பிரமாண்டபோஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications