கமல் நல்லா நடிக்கிறார்: திருமாவளவன் பாராட்டு
மதுரை:
தமிழ்ப் பற்று உள்ளவர் போல கமல்ஹாசன் நடிக்கிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கூறி வரும்எங்களை வன்முறை இயக்கமாக சிலர் கருதுகின்றனர்.
தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக தனது மும்பை எக்ஸ்பிரஸ் படப் பெயரை மாற்ற முடியாது என்றுபிடிவாதமாக இருக்கிறார் கமல்ஹாசன். படத்தின் தலைப்பை மாற்ற கமலுக்கு ஏன் மனமில்லை?
தனது படங்களில் ஒழுக்கக் கேடான பண்புகளையும் அவர் காட்டி வருகிறார். தமிழர் மரபுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும்அருவெறுப்பான காட்சிகளையும் அவரது மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலும் வைத்துள்ளார்.
தமிழ் இனத்துக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரானவராக நடந்து கொள்ளும் கமல்ஹாசனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழ் பற்று அதிகம் உள்ளவர் போல அவர் காட்டிக் கொள்கிறார், நடிக்கிறார். தமிழ் உணர்வு உள்ளவர்கள், மும்பை எக்ஸ்பிரஸ்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications