ஜெட் ஏர்வேஸ்: சிங்கப்பூர் சர்வீஸ் தொடக்கம்- விரைவில் அமெரிக்காவுக்கும்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

மும்பையிலிருந்து சிங்கப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்று தனது விமான சேவையை துவக்கியது. இந்த முதல் விமானத்தில் 60 பேர்பயணம் செய்தனர்.

தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், இந்தியா முழுவதும் விமான சர்வீஸ்களை நடத்துகிறது. இப்போது முதன் முதலாக இந்தநிறுவனம் சிங்கப்பூருக்கும் சேவையைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து இந் நிறுவனத்தின் தலைமை போக்குவரத்து அதிகாரி பீட்டர் லியூத்தி விமானத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,

முதன் முதலில் வெளிநாட்டுக்கு விமானப் போக்குவரத்தை தொடங்கியுள்ள நாங்கள் சிங்கப்பூரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தென்கிழக்குஆசியாவில் இந் நாடு மிகமுக்கிய பகுதியாக இருப்பதால் தான்.

மேலும் அமெரிக்காவுக்கும் விமான சேவையை துவங்க திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி மும்பையிலிருந்து நேவர்க் நகருக்கு ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு 6 விமானங்கள் இயக்கப்படும்.மேலும் கூடுதலாகவிமானங்களை வாடகைக்கு எடுத்து மும்பையிலிருந்து லண்டனுக்கு தினசரி விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

இது தவிர பிரஸ்ஸல்ஸ், ஆம்ஸ்டர்டாம் உட்பட அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானங்களை இயக்கவும்திட்டமிட்டுள்ளோம். எங்களது விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு சர்வதேச அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்இந்தியா மற்றும் தாய்லாந்திலிருந்து 100 பேரை நாங்கள் பணிக்கு தேர்வு செய்துள்ளோம்.

அவர்களுக்கு மும்பையில் இப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வியாபார சம்பந்தமாக தினமும் பயணம் செய்பவர்களின்வசதிக்காக சென்னை மற்றும் டெல்லியிலிருந்து பாயின்ட் டூ பாயின்ட் விமானங்களை இயக்க தீர்மானித்துள்ளோம்.

இதன்படி இங்கிருந்து புறப்படும் பயணிகள் அன்றைய தினமே ஊர் திரும்பி விடலாம். முதல் வருடத்திற்குள் நாங்கள் 75,000முதல் 80,000பயணிகளை ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மும்பையிலிருந்து சாங்கி விமான நிலையம் புறப்பட்ட இந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 60 பேர் பயணம் செய்தனர். ஜூன் மாதத்திற்குள்மும்பை-சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 21 விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியா- சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு 218 ஆக அதிகரித்துள்ளது.

மே மாதம் 5ம் தேதி முதல் சென்னையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கும் தினசரி விமான சேவையை ஜெட்ஏர்வேஸ் தொடங்கவுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் இந்தியா- சிங்கப்பூர் இடையே விமானப் போக்குவரத்து 21 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+