For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்த மதத்தில் சேர்ந்த 1000 தலித்துகள்

By Staff
Google Oneindia Tamil News

நெய்வேலி:

நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 1000 பேர் புத்த மதத்தில் சேர்ந்தனர்.

நெய்வேலி புது நகரில் உள்ள அண்ணா திடலில், புத்த அற நெறி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிகழ்ச்சியில், அம்பேத்கரின் பேரனும், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின்போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 1000 பேர் புத்த மதத்தில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில், புத்த மதம், மொழி, சாதி, அரசியல் அடையாளங்களை கடந்த மதம். இந்தியர்கள்என்ற சமத்துவத்தை ஏற்படுத்தும் ஒரே மதம் புத்தம்தான் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X