• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார் விபத்தில் மத்திய இணை அமைச்சர் காயம்

By Staff
|

காரைக்கால்:

மத்திய தரை வழிப் போக்குவரத்து இணை அமைச்சர் எச்.முனியப்பா, காரைக்கால் அருகே நடந்த கார் விபத்தில் காயமடைந்தார்.

கர்நாடகத்தைச் சேர்ந்தவர் முனியப்பா. இவர் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குச் செல்வதற்காகதனது உதவியாளர் புத்தாராஜ், பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் ஆகியோருடன் காரில் திருநள்ளாறுக்கு வந்தார்.

காரைக்கால் அருகே உள்ள கோட்டுச் சேரி என்ற இடத்தில் அவர்களது கார் வந்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி,தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் முனியப்பா, புத்தாராஜ், தன்ராஜ் ஆகிய மூவரும் காயமடைந்தனர். முனியப்பாவுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. மற்றஇருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

3 பேரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முனியப்பாவுக்கு தையல் போடப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்ததும் புதுவை சுகாதார அமைச்சர் வல்சராஜ் காரைக்கால் வந்து முனியப்பாவை சந்தித்து நலம்விசாரித்தார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X