• search

புதிய போப் ஆண்டவர் பதவி ஏற்றார்

By Staff
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    வாடிகன்:

    புதிய போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று வாடிகனில் முறைப்படி பதவி ஏற்றார். இந்த நிகழ்ச்சியைக் காண உலகம்முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் குவிந்தனர்.

    போப் இரண்டாம் ஜான் பால் மரணமடைந்ததையொட்டி புதிய போப் ஆண்டவராக ஜெர்மனியை சேர்ந்த ஜோசப் ரட்ஸிங்கர்தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய போப் இனி முதல் 16ம் பெனடிக்ட் என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    புதிய போப் ஆண்டவர் இன்று வாடிகனில் முறைப்படி பதவி ஏற்றார். இதையொட்டி வாடிகன் நகரமே விழாக்கோலம்பூண்டிருந்தது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது.

    புதிய போப் ஆண்டவரை கர்தினால்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். கர்தினால் ஒருவர் அவருக்கு சிறப்பு மோதிரம்அணிவித்தார். இதன்பின் கழுத்துப் பட்டையும், கிரீடமும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு கூடியிருந்தலட்சக்கணக்கான மக்களை ஆசிர்வதித்தார்.

    இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாடிகனில் குவிந்திருந்தனர்.அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரரும், கவர்னருமான ஜெப் புஷ், இத்தாலி பிரதமர், ஜெர்மனி அதிபர் உட்பட பலமுக்கிய தலைவர்கள் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Mail this to a friend  Post your feedback  Print this page 

    பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!


    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more