இணைய தளத்தில் சந்திரமுகி!
சென்னை:
இணையதளம் மூலம் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் ஆகிய புதிய படங்கள் காட்டப்பட்டு வருகின்றன. இந்த தளங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் நடராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஜினி நடித்த சந்திரமுகி, கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ், விஜய் நடித்த சச்சின் ஆகிய படங்கள் தமிழகம் முழுவதும்வெளியிடப்பட்டு ஓடி வருகின்றன. இதில் ரஜினி, கமல் ஆகியோரது படங்கள் சில வெளிநாடுகளிலும் ஓடுகின்றன.
இந் நிலையில், சந்திரமுகி படத்தைத் தயாரித்த சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை மாநகர ஆணையர் நடராஜிடம் புகார்கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஒரு இணையதளத்தில் சந்திரமுகி, மும்பைஎக்ஸ்பிரஸ், சச்சின் ஆகிய படங்கள் காட்டப்படுவது தெரியவந்தது.
இந்த இணையதளம், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து நடத்தப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தான் இதன்உரிமையாளர். இதுதவிர மேலும் 14 இணைய தளங்களில் இந்தப் புதிய படங்கள் காட்டப்படுகின்றன.
இதுகுறித்து கமிஷனர் நடராஜ் கூறுகையில், இணையதளங்கள் மூலம் புதிய படங்களை காட்டுவதாக புகார் வந்துள்ளது.இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இம்மாதிரி இணையதளம் மூலம் புதிய படங்களைக் காட்டுவோர் மீது சைபர் கிரைம்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்திரமுகி படத்தை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட இணையதளத்தை தடை செய்யுமாறு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளோம். மத்திய அரசின், இணையதள கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் அப்பாசிக்கும் கடிதம் எழுதிசம்பந்தப்பட்ட 14 இணையதளங்களையும் தடை செய்யுமாறு கோரியுள்ளோம்.
சந்திரகி இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இன்டர்நெட்மையங்களில் இப்படங்கள் காசுக்குக் காட்டப்படுகிறதா என்பதையும் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள் என்றார் நடராஜ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications