உயர்நீதிமன்றத்திற்கு 43 நாள் கோடை விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 43 நாள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின்போது உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுகோடை விடுமுறை மே 1ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜூன் 12ம் தேதி வரை 43 நாட்களுக்கு கோடை விடுமுறைவிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் வீட்டில் மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாது. மே 1 முதல் 15 வரையிலான விடுறை கால நீதிமன்றநீதிபதிகளாக சதாசிவம், குலசேகரன், தணிகாச்சலம் ஆகியோர் செயல்படுவார்கள். மே 16 முதல் 29 வரையிலும், மே 30 முதல்ஜூன் 12 வரை உள்ள கால கட்டத்தில் செயல்படும் விடுமுறை கால நீதிபதிகள் பின்னர் அறிவிக்கப்படுவர்.












Click it and Unblock the Notifications