தலித் குடும்பத்தினர் மீதான தடை திடீர் வாபஸ்
மதுரை:
கீரிப்பட்டியில், ஊர் மக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப் போடாத 15 தலித் குடும்பத்தினர் மீதுவிதிக்கப்பட்ட தடைகளை பிறமலைக் கள்ளர் சமுதாயத்தினர் வாபஸ் பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி தலித் ஊராட்சித் தலைவர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பெரும்பான்மையானபிறமலைக் கள்ளர் சமுதாயத்தினர், ஊர் மக்கள் சார்பில் அழகுமலை என்பவரை நிறுத்தினர். அவரை எதிர்த்து விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் பூங்கொடி என்பவர் போட்டியிட்டார்.
15 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். அவர்களுக்கு அசி, பருப்பு, காய்கறி, பால், தண்ணீர் போன்றவற்றைகொடுக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கீரிப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தடை குறித்து சுப்பன் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.இதையடுத்து மாவட்ட வருவாய் வட்டாட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் டிஎஸ்பி கோவிந்தராஜ் ஆகியோர்கீரிப்பட்டிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
கள்ளர் சமுதாயத் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினர். தடையுத்தரவை வாபஸ் பெறுமாறு கோரினர். மேலும் கீரிப்பட்டியில்உள்ள கடைக்காரர்கள், டீக்கடை உரிமையாளர்களை சந்தித்து தடை உத்தரவை பின்பற்ற மாட்டோம் என்று எழுதி வாங்கினர்.
அதிகாரிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்து தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக கள்ளர் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாகவும் உறுதிமொழி அளித்துள்ளனர்.
கீரிப்பட்டியில் தலித் சமுதாயத்தினர் மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன்கூறுகையில், தலித் குடும்பங்களை ஒதுக்கி வைத்தது உண்மை என்றால் அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். இதுபோன்ற தவறுகளுக்கு தூண்டுதலாக இருப்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications