துரைமுருகன், பொன்முடி மீது அதிமுக புகார்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக திமுகவைச் சேர்ந்த முன்னாள்அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் மீது மாவட்ட ஆட்சித் தலைவர், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோரிடம் அதிமுகபுகார் கூறியுள்ளது.
திமுகவுக்கு ஆதரவாக துரைமுருகனும், பொன்முடியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு செயல்வீரர்கள்கூட்டத்தில் பேசுகையில், அதிமுகவினரையும், அமைச்சர்களையும் தாக்கவும் தொண்டர்கள் தயங்கக் கூடாது என்று பேசியுள்ளனர்.
வன்முறையைத் தூண்டும் விதமாக அவர்கள் பேசியுள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில்கூறியுள்ளார் தாஸ்.
இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சித் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications