2 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்: மே 5ல் ஏவப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து 2 செயற்கைக் கோள்கள் வருகிற 5ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி6ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில், 2வது ஏவுதளம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இரண்டாவதுதளத்திலிருந்து முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி. சி6 வருகிற 5ம் தேதி ஏவப்படவுள்ளது.

இந்த ராக்கெட் மூலம் இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. ஒரே ராக்கெட் மூலம் 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். மேலும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இரண்டாவது முறையாக இப்போது ஏவப்படுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு 1600 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பிறகுதற்போது அதிக எடை கொண்ட செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிக எதிர்பார்ப்புடன்உள்ளனர்.

1560 கிலோ எடையுள்ள கார்டோசாட்-1 மற்றும் 42 கிலோ எடையுள்ள ஹாம்சாட் ஆகிய இரு செயற்கை கோள்களையும்பி.எஸ்.எல்.வி சி6 ராக்கெட் விண்ணில் செலுத்தும். இதற்கான கவுண்ட்டவுன் 3ம் தேதி காலை 5.49 மணிக்குத் தொடங்கும்.

ரூ. 400 கோடி செலவில் இரண்டாவது ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின்அனைத்து விதமான ராக்கெட்டுகளையும் ஏவும் வசதி இரண்டாவது ஏவுதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதுஏவுதளத்தை விட கூடுதல் வசதிகள் இந்த இரண்டாவது தளத்தில் உள்ளன.

வருடத்திற்கு 4 ராக்கெட்டுகள்:

இரண்டாவது ஏவுதளம் மூலம் வருடத்திற்கு நான்கு முறை ராக்கெட்டுகளை செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தற்போது செலுத்தப்படவுள்ள கார்டோசாட்-1 செயற்கைக் கோள், தொலையுணர்வு செயற்கைக்கோள் ஆகும். இந்த வரிசையில்இது 11வது செயற்கைக் கோள் ஆகும். கார்டோசாட் செயற்கக் கோளில் அதி நவீன கேமராக்கள் இரண்டு இடம் பெற்றுள்ளன.பூமியின் வரைபடத்தை மிகத் துல்லியமாக எடுக்கும் திறன் படைத்தவை இந்த கேமராக்கள். இந்தியாவின் வரைபடத்தை 126நாட்களில் இது மிகத் துல்லியமாக கொடுத்து விடும்.

நகர்ப்புற வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மிகவும் தேவையான வரைபடங்களைத் தயாரிக்க இந்த செயற்கைக் கோள்மிகவும் உறுதுணையாக இருக்கும்.

அதேபோல, ஹாம்சாட் செயற்கைக் கோள், ஹாம் ரேடியோவை செயல்படுத்துபவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பப்படுகிறது.இந்த சின்ன செயற்கைக் கோளில் 2 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இதில் ஒன்று இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது.இன்னொன்றை ஆலந்து நாட்டு பொறியியல் மாணவர் வடிவமைத்துள்ளனர்.

ஹாம் ரேடியோ தகவல் தொடர்பை மேம்படுத்த இந்த செயற்கைக் கோள் பெரும் உதவியாக இருக்கும் என்று திட்ட இயக்குநர்ஜே.பி. குப்தா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+