தேர்தல் வன்முறை: வைகோ மீதான வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீதான தேர்தல் வன்முறைதொடர்பான வழக்கு இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நீண்ட காலமாக மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கில் சமீபத்தில் விசாரணைமுடிவடைந்தது. இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையொட்டி வைகோ, கோ.சி. மணி உள்ளிட்டோர் இன்று மயிலாடுதுறை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிபதிஜெயசூர்யா இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கடந்த 21 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்குமுடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications