இடைத் தேர்தல்: போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் அதிமுகவினரின் அராஜகத்துக்கு போலீசார் துணை போனால் மத்திய அரசு கடும்நடவடிக்கையில் இறங்கும் என மத்திய உள்துறை இணையமைச்சரான ரகுபதி எச்சரித்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

சாத்தான்குளம், வாணியம்பாடி, சைதாப்பேட்டை, ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தல்கள் நடந்தபோது அதிமுகவினர்போலீசாரின் துணையுடன் அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்தியில் இருந்தது பாஜக ஆட்சி. அவர்கள் ஜெயலலிதாவுக்குதுணை போனார்கள்.

இப்போது நடப்பது வேறு ஆட்சி. இதை மனதில் வைத்துக் கொண்டு போலீஸ் அதிகாரிகள் செயல்பட வேண்டும். பணியில்நடுநிலைமையோடு அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் அதிமுகவினருடன் சேர்ந்து தில்லுமுல்லுக்களுக்கு துணை போனால், மத்திய அரசு அதை வேடிக்கை பார்க்காது எனஎச்சரிக்கிறேன். ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் பாயும்.

அதிகார பலம், ரெளடிப் படை இதையெல்லாம் வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினர் மிரட்டி வருகின்றனர். இதை திமுககூட்டணி திறமையாக எதிர்கொண்டு முறியடிக்கும் என்றார் ரகுபதி.

ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மிக்க மத்திய உள்துறையின் இணையமைச்சரான ரகுபதி இவ்வாறுபோலீஸ் அதிகாரிகளுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

வருகிறது சிஆர்பிஎப்:

இதற்கிடையே இடைத் தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளிலும் மத்திய ரிசவ்ர் போலீஸ் படைகள் நிறுத்தப்படும் என்றுகூறப்படுகிறது.

தமிழக போலீசார் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று எதிர்க் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளதால், இந்தநடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+