For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள், அதிமுகவுக்கே ஓட்டு போடுங்கள்: ஜெ பிரச்சாரம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

என் அன்புக்குரிய வாக்காளர்களே, இந்த அன்புச் சகோதரிக்கு துணை நின்று, இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்குஉதவுங்கள் என காஞ்சிபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

போயஸ் கார்டனில் இருந்து தனது உ.பி. சகோதரி சசிகலா சகிதமாக வேனில் புறப்பட்ட ஜெயலலிதாவை ஆரத்தி எடுத்து,பூசணிக்காய் உடைத்து அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ஜெயலலிதா, ஏசி வேனில் இருந்தபடியே மைக் மூலம் அதிமுக வேட்பாளர்மைதிலி திருநாவுக்கரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதா பேசிய இடங்களில் எல்லாம் அவரது வேனுக்கு அருகேதிறந்த ஜீப்பில் கை கூப்பிய வண்ணம் அட்டன்ஷன் போஷிசனில் நின்றிருந்தார் மைதிலி,

ஜெயலலிதாவின் பேச்சு விவரம்:

எம்ஜிஆரின் உண்மைத் தொண்டனாக விளங்கியவர் திருநாவுக்கரசு. அவர் இயற்கை மரணம் எய்திவிட்டதையடுத்து அவரதுதுணைவியார் மைதிலி இங்கே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழகத்தை ஒவ்வொரு துறையிலும் முதல் மாநிலமாக்கி வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு உங்கள் ஆதரவும்அன்பும் எப்போதும் உண்டு என்பதை நான் அறிவேன். நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உங்களுக்காக உழைக்கும் அன்புச்சகோதரியான என் தலைமையில் அரசு நிகழ்த்திட்ட சாதனைகள் ஏராளம், ஏராளம்.

இன்று எதிரணியில் இருக்கும் 7 கட்சிகளும் மத்தியில் ஆட்சியில் பங்கு வகிக்கின்றன. இந்த 7 கட்சிகள் ஆதரவு கொண்ட மத்தியஅரசு மக்களுக்கு செய்த சாதனைகள் தான் என்ன?

இந்த மத்திய அரசு டீசல் விலையையும் பெட்ரோல் விலையையும் உயர்த்தியது. இது தான் அவர்களது சாதனை. அதே போலசமையல் கேஸ் விலையை 40 ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். இதுவும் அவர்களது சாதனை தான்.

இந்த 7 கட்சிகளும் மக்களுக்கு என்ன செய்தன? சட்டமன்றக் கூட்டத்தை புறக்கணிப்பது, சட்டமன்றத்தில் கட்டுப்பாடில்லாமல்செயல்படுவது, வெளிநடப்பு செய்வது, வெளியில் போய் சபாநாயகரை கேலி செய்வது.. இதைத் தானே சாதித்தார்கள்.சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்தார்களா? மக்கள் பிரச்சனையை விவாதித்தது உண்டா?

முதல்வர் என்ற முறையில் நான் தரும் பதில்களைக் கேட்டு முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியாமல்சட்டமன்றத்தை விட்டு ஓடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

சட்டமன்றத்துக்குப் போய் பணியாற்ற நீங்கள் அவர்களை அனுப்பினால், அவர்கள் வெளியில் போய் நின்று சவடால்தனம்செய்கிறார்கள். அதற்கு அவர்கள் கூச்சப்படுவதும் இல்லை.

என் அன்புக்குரிய வாக்காளர்களே, இந்த அன்புச் சகோதரிக்கு துணை நின்று, அந்த எதிர்க் கட்சிகளுக்கு சரியான பாடம்புகட்டுங்கள். அவர்களுக்கு பதிலடி தரும் சந்தர்ப்பம் தான் இந்த இடைத் தேர்தல்.

மைதிலி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டால், காஞ்சிபுரம் தொகுதிக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் ஒரேவருடத்தில் நிறைவேற்றித் தருவேன் என்ற உறுதிமொழியை நான் இந்த நேரத்தில் உங்களுக்குத் தருகிறேன்.

வாக்களித்ததை நான் வாக்களித்தபடி வழங்குபவள் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் வாக்களியுங்கள் இரட்டைஇலைக்கு. வளமை சேர்க்க வாக்களியுங்கள் இரட்டை இலைக்கு.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

இரவு 9.50 மணிவரை பிரசாரம் செய்த ஜெயலலிதா பின்னர் சென்னை திரும்பினார்.

ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் வழியெங்கும் திரளான அதிமுக தொண்டர்கள் கூடி நின்று ஜெயலலிதாவுக்குவரவேற்பு அளித்தனர். வழியெங்கும் வரவேற்பு வளைவுகளும், கட் அவுட்களும், பிரமாண்ட பேனர்களும் இடம் பெறத்தவறவில்லை.

மேல் ஒட்டிவாக்கம், சரவாக்கம், கீழ் கதிர்பூர் ஆகிய 3 இடங்களிலும், லட்சக்கணக்கான மலர்களால் அமைக்கப்பட்ட மலர்கோபுரம் காண்போர் கண்களுக்கு விருந்தளித்தது. இந்த மலர்களால் அந்த இடமே கமகமவென்று மணத்தது. 40 அடி உயரம்கொண்ட இந்த மலர் கோபுரங்களை செய்தித்தறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அமைத்திருந்தார்.

ஜெயலலிதா பிரசாரத்தைத் தொடங்கிய ஒலிகம்மது பேட்டை பகுதி முஸ்லீம் சமுதாயத்தினர் நிறைந்த பகுதியாகும். அங்குஜெயலலிதாவின் பேச்சை ஏராளமான முஸ்லீம்கள் திரண்டு நின்று கேட்டனர்.

இன்றும் தொடர்ந்து காஞ்சிபுரம் தொகுதியில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X