திமுக அமைச்சர் பழனி மாணிக்கத்தின் விதி மீறல்: ஓ.பி. புகார்
சென்னை:
மத்திய நிதித்துறை இணையமைச்சரான பழனி மாணிக்கம், தேர்தல் நடத்தை விதி முறையை மீறி, அலுவலகப் பயணத்தோடு, தேர்தல்பயணத்தையும் சேர்த்து மேற்கொண்டுள்ளதாக, அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள புகாரில்கூறியுள்ளதாவது:
சில நாட்களுக்கு முன்புதான், தேர்தலின்போது அமைச்சர்கள் தங்களது சுற்றுப் பயணத்தையும், அலுவலகப் பணியையும் சேர்த்துமேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் அதை மத்திய நிதித்துறை இணை அமைச்சரான திமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இதை அப்பட்டமாக மீறும்வகையில் நடந்து கொண்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள டெல்லியில் இருந்து சென்னை வழியாக செல்வதற்காக சுற்றுப்பயணத் திட்டத்தை பேக்ஸ் செய்தி மூலம் மாநில அரசுக்கு தெரிவித்து, இந்தப் பயணத்தை அலுவல் சார்ந்த பயணமாக ஆக்கியிருப்பதாகஅறிகிறேன்.
தனது சுற்றுப்பயணத்தின் நோக்கம் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதோடு என்பது மட்டுமல்லாமல்,வரவேற்பு, போக்குவரத்து, தங்கும் வசதி போன்ற மாநில அரசின் வசதிகளைக் கோரி இருப்பதும் தெளிவாக விளங்குகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்:
தேர்தல் கமிஷனின் விதிப்படி பார்த்தால், இதுபோன்ற விஷயங்களில் டெல்லியில் இருந்து கும்மிடிப்பூண்டி வந்து மீண்டும் டெல்லிக்குத்திரும்பும் முழுப் பயணமும் தனிப்பட்ட பயணமாகவே கருதப்பட்டு இந்த முழுப் பயணத்தின் செலவையும் சம்பந்தப்பட்ட மந்திரியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த பேக்ஸ் செய்தி தேர்தல் கமிஷன் அறிவிப்பின் உணர்வுக்கு முற்றிலும் மாறாகவும், மாதிரி நடத்தை விதியின் ஒட்டுமொத்தமீறலாகவும் அமைந்துள்ளது.
அமைச்சரின் அலுவல் சார்ந்த சுற்றுப்பயணம், 3.5.2005 அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி 409இல் இருந்து தொடங்கிகும்மிடிப்பூண்டியில் அவரது பிரசாரம் 4.5.05 வரை தொடர்ந்து அதன் பிறகு சென்னையில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி440 மூலம் 5.5.05 அன்று காலை 6.40க்குப் புறப்பட்டு காலை 9.10 மணிக்கு போய்ச் சேர்வதாக குறிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் 2வது நேர்முக உதவியாளர் தமிழரசு என்பவர் இந்த பேக்ஸ் செய்தியை அனுப்பியுள்ளார். தனிப்பட்ட பயணம் இது என்றோ,செலவுகள் அனைத்தையும் அமைச்சரே ஏற்றுக் கொள்வார் என்றோ செய்தியில் எங்குமே தெரிவிக்கப்படவில்லை.
அதிகார இயந்திரம் முற்றிலும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பழனி மாணிக்கத்தின் முழுச் செலவுகளும் மத்திய நிதி அமைச்சகத்தால்ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தலைமைத் தேர்தல் ஆணையமும், தலைமைத் தேர்தல் அதிகாரியும் தலையிட்டு அமைச்சர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications