கைவிட்ட தெலுங்கு தேசம்: அதிர்ச்சியில் பாஜக
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புறக்கணிப்பு முடிவையும் மீறி இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கலந்து கொண்டது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக, எங்கள் கூட்டணியில் தெலுங்கு தேசம் இல்லை என்று கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து பாஜகூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் இரு கட்சிகளும் சேர்ந்து மண்ணைக் கவ்வின. அதிலிருந்தே பாஜகவை விட்டு விலக வேண்டும் என தெலுங்கு தேசத்தின்அனைத்து மட்டத்தில் இருந்தும் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடி கிளம்பியுள்ளது.
அதே போல தெலுங்கு தேசமும் இந்தப் புறக்கணிப்பில் ஈடுபட்டது. ஆனால், இன்று கூடிய அக் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தில்,மீண்டும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.
இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி சந்திரசேகர் ரெட்டி கூறுகையில்,
மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு செல்வதற்காகத் தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.அவர்களுக்காகவே இன்று நாங்கள் புறக்கணிப்பை கைவிட்டு விட்டு மீண்டும் அவைக்கு திரும்பியுள்ளோம் என்றார்.
எங்கள் கூட்டணியில் இல்லை: பாஜக
தங்கள் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் இன்று நாடாளுமன்ற புறக்கணிப்பை கைவிட்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ளது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் மல்ஹோத்ராவிடம் நிருபர்கள் கேட்டபோது, குப்புற கவுந்தாலும்மீசையில் மண் ஒட்டலையே என்றரீதியில் பதில் தந்தார். அவர் கூறுகையில்,
தெலுங்கு தேசம் எங்களது கூட்டணியிலேயே இல்லை. நாடாளுமன்றப் புறக்கணிப்பில் தொடர்ந்து கலந்து கொள்ளுமாறு நாங்கள்பலமுறை வற்புறுத்தினோம். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை என்றார்.
பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதற்கான முன்னோட்டமாகவே இன்று பட்ஜெட் கூட்டத்தில் தெலுங்கு தேசம் பங்கேற்றதாகக்கூறப்படுகிறது.
தெலுங்கு தேசமும் விலகினால், தென் இந்தியாவில் பாஜகவுடன் எந்த முக்கிய கட்சியும் இல்லாத சூழல் உருவாகவுள்ளது.
-
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications