குழந்தை கடத்தல்: கில்லாடிப் பெண் சலீமா கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த சலீமாவை அவரது உறவினர்கள் வீட்டில்வைத்து போலீஸார் கைது செய்தனர்.

ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் குடிசைவாசிகளின் குழந்தைகள் கடத்தப்பட்டு தத்து கொடுக்க, விற்கப்பட்டசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஷேக் தாவூத், வரதாரஜூ, மனோகரன்,சபீரா, நவ்ஜீன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தக் கும்பலை சேர்ந்த சலீமா, ஜெபக்கனி, தாவூத், பாபு, மெஹ்ரூன் ஆகிய 5 பேரை போலீஸார் தேடி வந்தனர்.இவர்களில் சலீமா,ஜெபக்கனி ஆகிய பெண்கள் தான் முக்கிய குற்றவாளிகள் ஆவர்.

இவர்களில் சலீமா, சென்னை ஆர்.கே.நகர், ஜெ.ஜெ. நகரிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. இதன் படி போலீஸார் அங்கு விரைந்து சென்று சலீமாவை கைது செய்தனர்.

முதலில் தான் சலீமா இல்லை, தனது பெயர் சித்ரா என்று சலீமா கூறினார். ஆனால் அவரது புகைப்படத்தைக் காட்டிய பின்னர் தான்தான் சலீமா என்பதை ஒத்துக் கொண்டார். பின்னர் அவரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஆர்.கே.நகர் போலீஸார்ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, குழந்தைகள் விற்கப்பட்ட மலேசியன் சோசியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் அலுவலகத்தைத் திறந்து போலீஸார்மீண்டும் சோதனையிட்டனர்.

புளியந்தோப்பிலிருந்து அமெரிக்காவுக்கு ...:

புளியந்தோப்பைச் சேர்ந்த நாகேஸ்வரராவ்-சிவகாமி தம்பதியினரின் கடத்தப்பட்ட குழந்தை தற்போது அமெரிக்காவில் இருப்பதுதெரியவந்துள்ளது.

நாகேஸ்வரராவ் சாதாரண பெயிண்டர் ஆவார். கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகாமி தண்ணீர் பிடிப்பதற்காக வெளியேசென்றபோது, அவரது ஆண் குழந்தையை கடத்தல் கும்பல் எடுத்துச் சென்று விட்டது. அதன் பிறகு குழந்தையைத் தேடி அதன்பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தற்போது இந்தக் குழந்தை சுபாஷ் என்ற பெயரில், அமெக்காவில் வளர்கிறான். ஓட்டேரி காவல் நிலையத்தில் சிவகாமி வந்துவிசாரித்தபோது இந்தத் தகவல் கிடைத்தது. காணாமல் போன தனது மகன் அமெரிக்காவில் வாழ்கிறான் என்பதை அறிந்ததும்சிவகாமி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

என்ன ஆனானோ என்று கவலைப்பட்டேன். ஆனால் அமெரிக்காவில் நன்றாக இருப்பதை அறிந்ததும் சந்தோஷம். அவனைஎன்னிடம் திருப்பிக் கொடுக்க காவல்துறையினர் உதவ வேண்டும். எங்களிடம் அவன் திரும்பி வந்தால் நிச்சயம் நன்றாகவளர்ப்போம் என்றார் சிவகாமி.

ஹாலந்தில் விற்கப்பட்ட குழந்தை:

அதே போல சென்னை பூக்கடை பகுதியிலிருந்து இந்தக் கும்பலால் கடத்தப்பட்ட ஆண் குழந்தை, நெதர்லாந்து (ஹாலந்து)நாட்டில் தற்போது வளர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆண் குழந்தை 1998ம் ஆண்டு இக்கும்பலால் கடத்தப்பட்டுள்ளது. பூக்கடை பகுதியைச் சேர்ந்த நடைபாதைவாசி ரெஜீனாஎன்பவரின் குழந்தை அது. தங்களது குழந்தையை போலீஸார் மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதன் பெற்றோர்கோரியுள்ளனர்.

இதற்கிடையே, மேலும், வெளிநாடுகளுக்குக் குழந்தைகளைத் தத்து கொடுத்து வரும் சென்னையச் சேர்ந்த 13 நிறுவனங்களில்சோதனை நடத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

குழந்தைகள் கடத்தல்: மலேசிய சமூக சேவை நிறுவனத்துக்கு சீல்
குழந்தைகளை கடத்தி வெளிநாட்டில் விற்பனை: பிச்சைக்காரி உள்பட 5 பேர் கைது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+