For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை: பிச்சைக்காரி உள்பட 5 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:


சென்னை நகரில் குழந்தைகளைத் திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய கும்பலைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குழந்தைகள் கடத்தல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தெருவோரக் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள்சாதாரணக் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்துபவர்கள். இந்தப் பகுதியைச் சேர்ந்த பல குழந்தைகள் கடந்த சில வருடங்களாகதிடீர் திடீரென காணாமல் போயுள்ளன. இதுதொடர்பாக பல புகார்கள் காவல் நிலையங்களில் உள்ளன.

களமிறங்கிய சைலேந்திரபாபு:

இந்த வழக்குகளை ஒருங்கிணைத்து தீவிர விசாரணை நடத்தும்படி மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் உத்தரவிட்டார்.இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியது இணை ஆணையர் சைலேந்திரபாபுதலைமையிலான டீம்.

இந்த தனிப்படையின் தீவிர விசாரணையில் பிள்ளை பிடிக்கும் கும்பல் ஓட்டேரி பகுதியில் நடமாடுவது தெரியவந்தது.இதையடுத்து அந்தக் கும்பல் குறித்த தகவல்களை சேகரித்த போலீஸார், கும்பலின் தலைவனாகக் கருதப்படும் ஷேக் தாவூத்என்பவரை வளைத்தனர்.

ஷேக் தாவூத்துக்கு உரிய பூசை நடத்தியபோது பகீர் தகவல்களை கக்கினார்.

கடந்த 1998ம் ஆண்டிலிருந்து பிள்ளைகளை கடத்திச் சென்று வெளிநாட்டில் விற்பனை செய்து வருவதாக ஷேக் தாவூது கூறினார்.தான் மட்டும் இதுவரை 7 குழந்தைகளை தான் கடத்தி விற்பனை செய்துள்ளதாகவும் தாவூத் கூறியுள்ளார்.

தாவூத் தலைமையிலான கும்பலில் வரதராஜு, அவரது முதல் மனைவி சலீமா, 2வது மனைவி ஜெபக்கனி, தாவூத்தின் மைத்துனிநவஜீன், ஓட்டேரியைச் சேர்ந்த பிச்சைக்காரப் பெண்மணி சபீரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் ஜெபக்கனி, சலீமா ஆகியோரைத் தவிர மற்ற அனைவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மலேசிய தொண்டு நிறுவனம் உடந்தை?:

குழந்தைகளைக் கடத்தி, விற்பனை செய்தது எப்படி என்பது குறித்து கைதான ஷேக் தாவூது பரபரப்பு தகவல்களைத்தெரிவித்துள்ளார்.

குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்யும் யோசனையை வரதராஜுதான் தாவூதுக்குக் கொடுத்துள்ளார். இவர்களுக்கு சென்னைதிருவேற்காடு அருகே உள்ள மலேசியா தொண்டு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றும் மனோகரன் என்பவர் உடந்தையாகஇருந்துள்ளார்.

மலேசியன் சோசியல் சர்வீஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம் திருவேற்காடு அருகே உள்ள மாதிரவேடு என்ற இடத்தில்உள்ளது. பதிவு செய்யப்பட்ட நிறுவனமான இதில், நூற்றுக்கணக்கான அனாதரவற்ற சிறுவர், சிறுமியர் தங்கியுள்ளனர்.

இங்கு தங்கியிருக்கும் குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டும் வருகிறார்கள். இந்த நிறுவனத்தில்தான் மனோகரன் வேலை பார்த்துவருகிறார். அவரது உதவியுடன்தான் கடத்தப்பட்ட குழந்தைகளை தாவூத் கும்பல் விற்பனை செய்துள்ளது.

தாவூத், வரதராஜு ஆகியோரை சந்தித்த மனோகரன், தத்து எடுப்பதற்கு குழந்தைகள் தேவைப்படுவதாகவும், குழந்தைகளைக்கொண்டு வந்து கொடுத்தால் ரூ. 10,000 வரை தருவதாகவும் கூறியுள்ளார்.

பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இந்த இருவரு 10,000 ரூபா என்ற வார்த்தையைக் கேட்டதும் வாயைப் பிளந்தபடியே குழந்தைகடத்தலில் குதித்துள்ளனர்.

இந்தக் கும்பல் இதுவரை 7 குழந்தைகளைக் கடத்தி விற்றுள்ளனர். இந்தக் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்ததன் மூலம்கிடைத்த ரூ. 70,000 பணத்தை அனைவரும் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர்.

பிச்சைக்காரிகள் வேடத்தில்...

ஜெபக்கனி, நவ்ஜீன் ஆகியோர் பிச்சைக்காரிகள் போல வேடமிட்டு குடிசைப் பகுதிகள் உள்ள இடங்களில் சுற்றி அலைவர்.அவர்களுடன் ஒரிஜினல் பிச்சைக்காரியான சபீராவும் உடன் செல்வார். குழந்தைகள் எங்காவது தனித்து திரிந்தால் ஒரே அமுக்காகஅமுக்குவர்.

தாவூதும், வரதராஜுலும் ஆட்டோவில் தயாராக காத்திருப்பர். திருடப்பட்ட குழந்தையை இக் கும்பல் ஆட்டோவில் திணித்துக்கொண்டு பறந்துள்ளனர்.

இந்தக் குழந்தைகளை மலேசியன் சோசியல் சர்வீஸ் நிறுவனத்திற்குச் கொண்டு செல்வர். அங்கு தாங்கள்தான் பெற்றோர் என்றுகையெழுத்திட்டு குழந்தையை கொடுத்து விட்டு வந்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் ஜோடி மாறி குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு வந்துள்ளனர். இவர்களுக்குய பணத்தை மனோகரன்கொடுத்து விடுவாராம். பின்னர் அந்தக் குழந்தைகள் வெளிநாட்டுத் தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளன, அதாவது நல்லவிலைக்கு விற்கப்பட்டுள்ளன.

கடத்தப்பட்ட 7 குழந்தைகள் விவரம்:

1. ஓட்டேயைச் சேர்ந்த நடைபாதையில் பிழைப்பு நடத்தி வரும் நூருல்லா, லட்சுமி தம்பதியின் ஒரே மகளான பாத்திமா. ஒன்றரைவயதாக இருக்கும்போது கடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இக்கும்பலால் கடத்தப்பட்டாள்.

2. 1998ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்து பத்தே நாள் ஆன குழந்தையை இக்கும்பல் புளியந்தோப்பு பகுதியிலிருந்துதிருடியது. அந்த இடத்தில் தற்போது குழந்தையின் பெற்றோர் இல்லை. அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

3. மூன்றரை வயதான ஜூபின். சாலியா என்பவரின் குழந்தையான ஜூபின், 98ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி திருடப்பட்டாள்.வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் சாலியா வசித்து வந்தார். பட்டப் பகலில் இந்தக் குழந்தையை இக்கும்பல்திருடியுள்ளது.

4. பானுப்பியா, பீனா ஆகிய இரு குழந்தைகளும் இக்கும்பலால் கடத்தப்பட்டுள்ளன. இவர்களது பெற்றோர் யார் என்பதுஇக்கும்பலுக்கேத் தெரியவில்லை. தெருவில் தனியாக திரிந்தபோது இரு குழந்தைகளையும் இக்கும்பல் அழைத்துச் சென்றுவிற்றுள்ளது.

5. புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி சாலையில் வசிக்கும் கதிர்வேலு என்பவரின் ஒன்றரை வயது குழந்தையான சதீஷ் பாபு,1999ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி கடத்தப்பட்டான்.

6. ஏழாவது குழந்தை யார், எங்கிருந்து கடத்தப்பட்டது என்ற விவரம் ஜெபக்கனிக்குத்தான் தெரியுமாம். தலைமறைவாகி விட்டஅவரைப் பிடித்தால் அந்தக் குழந்தை குறித்த தகவலும் தெரிய வரும்.

மலேசிய நிறுவனம் மறுப்பு:

ஆனால், குழந்தைகள் கடத்தல் விஷயத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மலேசியன் சோசியல் சர்வீஸ் நிறுவனம்மறுத்துள்ளது.

தங்களிடம் கொடுக்கப்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்ட குழந்தைகள் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் அந்த நிறுவனம்கூறியுள்ளது.

இந் நிறுவனத்தின் நிறுவனர் ரவீந்திரநாத். அவரது மனைவி வத்லசா தான் நிறுவனத்தை தற்போது நடத்தி வருகிறார். மொத்தம்325 குழந்தைகளை இந்த நிறுவனம் இதுவரை தத்து கொடுத்துள்ளது.

இதில் 125 குழந்தைகள் வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் கடத்தப்பட்ட 7 குழந்தைகளும் அடக்கம்என்பது குறிப்பிடத்தக்கது.

தத்து கொடுக்கும் நிறுவனம்:

இந்த பிரச்சினை குறித்து வத்சலா கூறுகையில்,

1977ம் ஆண்டு எனது கணவர் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவு தருவதற்காகவே இந்தநிறுவனத்தைத் தொடங்கினோம். பின்னர் குழந்தைகளை தத்து எடுத்து கொடுக்க ஆரம்பித்தோம்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனுமதியுடன்தான் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் தத்துஎடுப்பதற்கும், கொடுப்பதற்கும் பல விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படிதான் குழந்தைகளை வாங்குகிறோம்,கொடுக்கிறோம்.

குழந்தைகள் இல்லா தம்பதிகளுக்கு கடந்த 1991ம் ஆண்டு முதல் சட்டப்படியான முறையில் தத்து கொடுத்து வருகிறோம். தத்துஎடுக்கப்படும் குழந்தைகளை அதை வாங்கியவர்களிடம் உடனடியாக கொடுத்து விட மாட்டோம்.

ரூ. 25,000க்கு விற்பனை:

3 மாதங்கள் எங்களது கட்டுப்பாட்டில்தான் குழந்தை இருக்கும். ஒரு வேளை, குழந்தையை தத்து கொடுத்தவர்கள், மனம் மாறி,எங்களிடம் வந்து குழந்தையைத் திருப்பிக் கேட்டால் என்ன செய்வது என்பதால்தான் 3 மாதம் பொறுத்திருந்து அதன் பிறகே தத்துஎடுத்தவர்களிடம் குழந்தையைக் கொடுக்கிறோம்.

ரூ. 25,000 கட்டணத்தின் பேரில் குழந்தையைத் தத்து கொடுக்கிறோம். குழந்தையைப் பராமரிக்க ஆகும் செலவுக்காகவே இந்தகட்டணத்தை பெறுகிறோம். நாங்கள் தத்து கொடுத்துள்ள குழந்தைகள் அனைத்தும், குறிப்பாக வெளிநாடுகளில் தத்துகொடுக்கப்பட்ட குழந்தைகள் 125 பேரும் மிக நன்றாக உள்ளனர்.

வருடத்திற்கு ஒருமுறை குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அதைத் தத்தெடுத்தவர்கள் புகைப்படங்களுடன் எங்களுக்குத்தெரிவிக்க வேண்டும் என்றார் வத்சலா.

ஆஸ்திரேலியா, நெதர்லாந்தில் வாழும் குழந்தைகள்:

கடத்தப்பட்ட 7 குழந்தைகளில் 4 குழந்தைகள் தற்போது மிகவும் வசதியான குடும்பத்தில் வாழ்ந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. குழந்தை பாத்திமா, செல்வி என்ற பெயரில், நெய்வேலியைச் சேர்ந்த பொறியாளர் மனோகரன் குடும்பத்தில் வாழ்ந்துவருகிறாள்.

ஜூபின், சுந்தரி என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறாள். சதீஷ்குமார், அன்பு என்ற பெயரில் நெதர்லாந்தில்வசிக்கிறான். பிறந்து பத்து நாட்களில் கடத்தப்பட்ட பெண் குழந்தை, சுஜி என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் உள்ளாள்.

பாத்திமாவை மீட்பேன்: தாயார்

இவர்களில் பாத்திமாவை மீண்டும் மீட்கப் போவதாக அவளது தாயார் லட்சமி திட்டவட்டமாக கூறியுள்ளார். எனக்கு ஒரேமகள்தான். அவளை நான் விட மாட்டேன். நெய்வேலிக்கு சென்று பொறியாளர் மனோகரனை சந்தித்து எனது குழந்தையை மீட்கப்போகிறேன். வழக்கு போட்டாவது எனது குழந்தையை நான் மீட்பேன் என்று கூறுகிறார் லட்சுமி.

குழந்தைகளை கடத்தல் கும்பலிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, மோசடிக்கு உடந்தையாக இருந்த மனோகரனையும்போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் எழும்பூர் 5வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் சில ஏஜண்டுகளையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓட்டேரியில் குவியும் பெற்றோர்:

இந்த நிலையில் இக்கும்பல் குறித்த செய்தி வெளியானவுடன், குழந்தைகளைத் தொலைத்த ஏராளமான பெற்றோர் ஓட்டேரிகாவல் நிலையத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

அவர்களில் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் கூறுகையில், எனது ஆண் குழந்தை 5 ஆண்டுகளுக்கு முன்புகாணாமல் போனது. இப்போது பிடிபட்டுள்ளவர்களில் ஒரு பெண்தான் இந்தக் குழந்தையைக் கடத்தியிருக்க வேண்டும்.இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார் அழுதபடியே.

அதிக அளவில் புகார்கள் வந்து கொண்டிருப்பதால், இந்த வழக்கை ஓட்டேரி காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றிஉத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X