வாக்காளர்களுக்கு தொப்பிக்குள் வைத்து பணம்: திமுக மீது அதிமுக புகார்
காஞ்சிபுரம்:
காஞ்சீபுரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ. 3 கோடி பணத்தை திமுக இறக்கி விட்டுள்ளதாக அதிமுக புகார்கூறியுள்ளது.
காஞ்சிபுரம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ராவிடம் முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, கா.ப.பட்டாபிராமன்உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக மனு ஒன்றைக் கொடுத்தது.
இதுகுறித்து அன்வர்ராஜா கூறுகையில்,
மத்திய திமுக அமைச்சர்களான தயாநிதி மாறன், பழனிமாணிக்கம், ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர்களானபொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தொகுதியிலேயே முகாமிட்டு வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்துவருகிறார்கள்.
திமுக தொண்டர் என்றால் ஒரு ஓட்டுக்கு 50 ரூபாயும், பொதுவான ஆட்கள் என்றால் ரூ. 100ம், தலித்துகள் மற்றும்வன்னியர்களுக்கு ரூ. 200 என பிரித்து கொடுத்து வருகிறார்கள்.
முஸ்லீம்களுக்கு தொப்பி கொடுப்பது போல அதற்குள் பணத்தை வைத்து கொடுக்கிறார்கள். இப்படிப் பணம் கொடுப்பதற்காக ரூ.3 கோடி வரை திமுக தரப்பில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் புகார் மனுவுடன் இணைத்துள்ளோம்.
இதேபோல பொன்முடி தனது ஊலிருந்து 300 குண்டர்களை அழைத்து வந்து பிள்ளையார்பாளையத்தில் தங்க வைத்துள்ளார்.இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக ராவ் உறுதி கூறியுள்ளார் என்றார் அன்வர்ராஜா.












Click it and Unblock the Notifications