சங்ககிரி அருகே 2 அரசு பேருந்துகள் மோதி 8 பேர் பலி: 54 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:


சேலம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 54 பேர்காயமடைந்துள்ளனர், இதில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.

நேற்று மாலை சேலத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று திருப்பூருக்குக் கிளம்பியது. இந்தப் பேருந்து சங்ககிரி அருகே வந்தபோது,எதிரே எடப்பாடியை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

இரு பேருந்துகளும் பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இரு பேருந்துகளும் உருக்குலைந்து போயின.


இதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலும் மேலும் 2 பேர் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் பலியாயினர்.

விபத்தில் மேலும் 54 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஈரோடு, சங்ககிரி, சேலம் அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களில் தைலம்மாள், சாமிநாதன், விஜயக்குமார் ஆகியோரது உடல்கள் மட்டுமே அடையாளம் மட்டும்காணப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்து போயுள்ளன.

சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்துக்குப் பின்புறம் கார் ஒன்று வந்து கொண்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்த கார், பேருந்தை ஓவர்டேக் செய்து முந்தியபோது, எதிரே சேலத்திலிருந்து வந்த அரசுப் பேருந்து குறுக்கிட்டதால்கார் டிரைவர் குழம்பிப் போய் தாறுமாறாக ஓட்டியுள்ளார்.

இதனால் தான் இரு பேருந்துகளும் மோதிக் கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரு பேருந்துகளும் மோதிக் கொள்வதற்கு காரணமாக அமைந்த கான் டிரைவரான பெங்களூரைச் சேர்ந்த ஆனந்தராஜ்என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+