ஜெ முடிக்கிறார்.. கருணாநிதி தொடங்குகிறார்
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதாவும், அமைச்சர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளநிலையில் திமுக தலைவர் கருணாநிதி வரும் 10ம் தேதி தனது பிரச்சாரத்தை நடத்துகிறார்.
முதல்வர் ஜெயலலிதா 3ம் தேதியே தனது சூறாவளிப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். காஞ்சிபுரத்தில் மட்டும் இதுவரை 58இடங்களில் அவர் பேசியுள்ளார். ஆனால், முதல் கூட்டத்தில் என்ன பேசினாரோ அதையே தான் எழுதி வைத்துக் கொண்டுதிரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.
பிரச்சாரத்தை ஜெயலலிதா முடிக்கும் தினமான 10ம் தேதி தான் திமுக தலைவர் கருணாநிதி தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
அன்றைய தினம் காஞ்சிபுரம் செல்லும் கருணாநிதி அத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்திலும்பேசுகிறார்.
அக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், வைகோ, வரதராஜன், தா.பாண்டியன்,ஆர்.எம்.வீரப்பன், காதர் மொஹைதீன் ஆகியோரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ராஜ கண்ணப்பன், டாக்டர் சேதுராமன்ஆகியோரும், கருணாநிதியின் நண்பரான பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோரும் பேசுகிறார்கள்.
இதேபோல 11ம் தேதி கும்மிடிப்பூண்டியிலும் பிரச்சாரம் செய்யும் கருணாநிதி, அங்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதிலும்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த இரு தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர்கள் வாசன்,ப.சிதம்பரம், இளங்கோவன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் ஒரு சுற்று பிரச்சாரத்தை முடித்துவிட்டனர்.
இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களுக்காக திருமாவளவனும் தீவிர பிரச்சாரத்தில்ஈடுபட்டுள்ளார்.
மேலும் அதிமுக தரப்பில் இருந்து எஸ்எஸ் சந்திரன், குண்டு கல்யாணம், எஸ்வி சேகர், நடிகைகள் சரஸ்வதி, பபிதாபோன்றவர்களும் திமுக சார்பில் சரத்குமார், நெப்போலியன் ஆகியோரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த இரு தொகுதிகளிலும் வரும் 12ம் தேதி மாலையோடு பிரச்சாரம் ஓய்கிறது. 14ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.
காஞ்சி மடத்தின் தீவிர பக்தரான எஸ்வி சேகர் தனது பிரச்சாரத்தில் மறந்தும் கூட ஜெயேந்திரர் டாப்பிக் பக்கம் போவதே இல்லை.












Click it and Unblock the Notifications