சென்னை-டெல்லி விமானத்தில் கோளாறு: 147 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை:
சென்னையிலிருந்து இன்று காலை டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் திடீர் கோளாறு காரணமாக அவசரமாகதரையிறக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் இருந்த சுப்பிரமணியசாமி உட்பட147 பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னையிலிருந்து இன்று காலை 6.50 மணியளவில் இந்தியன் ஏர்லைன்ஸின் ஐசி 440 என்ற விமானம் டெல்லிக்கு புறப்பட்டுசென்றது. இதில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி உட்பட 147 பயணிகள் இருந்தனர்.
இதையடுத்து அந்த விமானம் 7.50 மணியளவில் தரை இறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள்அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன் பிறகு அனைவரும் வேறு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |